எலுமிச்சம் பழத்தால் எம்.ஜி.ஆருக்கு வருத்தம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 492

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொட்ங்கிய பிறகு அறிவித்த முதல் போராட்டம்  1972 நவம்பர் 26 அன்று நடைபெற்றது.  

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. அந்த வகையில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.வாக இருந்த கருணாநிதியிடம் சடகோபன், சைதை துரைசாமி ஆகியோர் அடங்கிய குழு நேரில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் கருணாநிதி சடகோபன் கையில் ஒரு எலுமிச்சம்பழம் கொடுத்தார். அதன் அர்த்தம் புரியாமல் சடகோபன் வாங்கிக்கொண்டார்.  

இதை பார்த்த பத்திரிகையாளர்கள் கருணாநிதியிடம், ‘நீங்கள் ராஜினாமா செய்ய மனு கொடுத்தவர்களிடம் எலுமிச்சம்பழம் கொடுத்தது ஏன்?’ என்று காரணம் கேட்டார்கள்.

அதற்கு கருணாநிதி, ’தெளிவில்லாதவர்கள் தேய்த்து குளிக்கட்டும்’ என்று பதில் சொன்னார்.

மறுநாள் அந்தச் செய்தி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. இந்த செயல் புரட்சித் தலைவருக்கு கோபத்தை உண்டாக்கியது. எனவே சடகோபனை அழைத்து, ’எதற்காக அவரிடம் எலுமிச்சம் பழம் வாங்கினீர்கள், திட்டமிட்டு அவமானம் செய்திருக்கிறார்’என்று வருத்தம் தெரிவித்தார்.

இந்தத் தகவலை சைதை துரைசாமியிடம் சடகோபன் கூறினார். புரட்சித்தலைவர் வருத்தப்பட்டார் என்றதும் சைதை துரைசாமிக்கு கடுமையான கோபம் வந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment