கருணாநிதி கொடுத்த எலுமிச்சம்பழம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 491

திமுகவின் ஊழல் மற்றும் வாரிசு அரசியலை எதிர்த்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 1972ம் ஆண்டு தொடங்கினார். புதிய கட்சியின் முதல் போராட்டத்தை புரட்சித்தலைவர் 1972 நவம்பர் 26 அன்று அறிவித்தார்.

அதாவது, திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். எனவே திமுக சார்பில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைதிப் பேரணி நடத்தி, எம்.எல்.ஏ.க்களிடம் நேரில் மனு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார்..

அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஊர்வலமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்குச் சென்று, ராஜினாமா செய்யச் சொல்லி மனு கொடுத்தனர்.

அப்போது சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி. எனவே, அவரது வீட்டிற்கு சைதை தொகுதி அமைப்பாளர் சடகோபன் தலைமையில் சைதை துரைசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வடபழனி சிங்கார வேலன் திடலிலிருந்து கோபாலபுரம் நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள்..

கருணாநிதி இருந்த தெருவில் நுழையும் முன்பாகவே ஊர்வலம் நிறுத்தப்பட்டது. சடகோபன், சைதை துரைசாமி உள்ளிட்ட சிலர் மட்டும் கருணாநிதியிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். முதல்வரை சந்தித்து சடகோபன் மனு கொடுத்தார். அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட கருணாநிதி சிரித்தபடி சடகோபன் கையில் ஒரு எலுமிச்சை பழம் கொடுத்தார். அதன் அர்த்தம் புரியாமல் சடகோபனும் வாங்கிக்கொண்டார். இதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment