உறவுக் குழப்பங்கள்
அன்பு, அர்ப்பணிப்பு, நம்பிக்கையின் அடிப்படையில்தான் குடும்ப வாழ்க்கை வெற்றி அடைகிறது. புதிய கலாச்சாரம் என்று திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை நார்மலைஸ் செய்வது நிறைய குடும்ப உறவுகள் சிதைந்து போகிறது.
நிறைய பணம், புகழ் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்பது உண்மை அல்ல என்பதை நடிகர் ரவி மோகன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இளைய தலைமுறையினர் ரவி மோகன் செய்த 10 தவறுகளை அறிந்துகொள்வது, ஆரோக்கியமான திருமண உறவுக்கு நல்ல ஆலோசனையாக இருக்கும்.
10 ஆலோசனைகள்
1. ஆர்த்தி கையை அறுத்துக்கொண்டு மிரட்டி திருமணம் செய்துகொண்டார் என்று ரவி சொல்கிறார். ரவியே கையை அறுத்துக்கொண்டு மிரட்டினார் என்று மாமியார் சுஜாதா சொல்கிறார். கையை அறுத்துக்கொள்வது தீவிரமான மன அழுத்தம். இதற்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர, திருமணம் செய்யக் கூடாது.
2. அழகான மனைவி டாக்ஸிக் பெண் என்பது தெரியவந்தால், ஆரம்பத்திலே அவர் குணத்தை மாற்றுவதற்கு மருத்துவர் உதவியை நாடியிருக்க வேண்டும். காலம் கடத்துவது டாக்ஸிக் குணத்தை அதிகரிக்கவே செய்யும்.
3. ஒரு தாய் எப்போதும் மகளுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பார். எனவே, தம்பதியருக்கு இடையில் மாமியார் சுஜாதா, அவரது தோழி குஷ்பு போன்றோர் நுழைவதற்கு அனுமதித்தது தவறு.
4. தனுஷ் போன்ற பிரபல நடிகர், நடிகைகளுடன் அளவுக்கு மீறிப் பழகும் நவீன பார்ட்டி கலாச்சாரம் குடும்ப உறவுக்கு மோசமான விளைவுகளே தரும்.
5. பிளாக் மேஜிக் செய்கிறார்கள், ரத்த வாந்தி எடுக்கிறேன் என்று ரவி சொல்வது தீவிரமான உளவியல் பிரச்னை. உடனடியாக மனநல மருத்துவரை அணுகி தெளிவு பெறுவது அவசியம்.
6. நல்ல நடிகரான ரவி மோகன் திடீரென தயாரிப்பாளர், இயக்குனர் என்று பாதை மாறியது அவரது சொந்த முடிவாகத் தெரியவில்லை. பேராசைப்பட்டால் பெரும் துன்பமே கிடைக்கும்.
7. ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர் என்றாலும் மணி மேனேஜ்மெண்ட் மிகவும் முக்கியம். அந்த திறமையை வளர்த்துக்கொள்ளாமல் மனைவியிடம் வங்கிக் கணக்கு ஒப்படைத்த அசட்டுத்தனத்தால் கோடிகளில் சம்பாதித்த பணத்தை இழந்துநிற்கிறார்.
8. குழந்தைகளுக்காக டாக்ஸிக் உறவை பொறுத்துக்கொண்டேன் என்பது தம்பதி மட்டுமின்றி குழந்தைகள் மனநிலையையும் பாதிக்கும். அதனாலே குழந்தைகளை இழந்து நிற்கிறார்.
9. மனம் தடுமாறும் நேரங்களில் உறுதியான நபர்களிடம் நிம்மதியைத் தேட வேண்டும். ஆதரவாக நின்ற கெனிஷா விலகிப்போனது ரவி மோகனை அதிகம் தடுமாற வைத்திருக்கிறது.
10. விவாகரத்து முடியும் வரை நடிக்க மாட்டேன் என்ற ரவியின் முடிவு தவறு. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து தொழிலில் கவனத்தை திசை திருப்புவதே இப்போது ரவிக்கு முக்கியம்.
கவுன்சிலிங் தீர்வு
திருமணத்திற்கு முன்பு சின்ன குழப்பம் இருந்தாலும் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுங்கள். குடும்ப உறவுக்குள் பிரச்னை வரும்போது அம்மா, அப்பா, உறவினர், தோழன், தோழியின் ஆதரவு தேடாதீர்கள். ரிலேசன்ஷிப் விவகாரங்களைக் கையாளும் புரபொஷனல் கவுன்சிலிங் நபர்களிடம் செல்லுங்கள். தெளிவு கிடைக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
