தரையில் வாழும் திமிங்கலம் தெரியுமா?

ஆச்சர்யத் தகவல்

திமிங்கலம் என்றால் கடலில்தான் வாழும். அதேநேரம் அடுத்தவர் பணத்தையும் சொத்தையும் ஏமாத்தி விழுங்கும் மனிதர்களை திமிங்கலம் என்று அடைமொழியுடன் அழைப்பதுண்டு. அவர்களைத்தான் நிலத்தில் வாழும் திமிங்கலம் என்று நினைக்காதீர்கள்.

கதையல்ல நிஜம்.

இல்லை. நிஜமாவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன் திமிங்கலங்கள் தரையில்தான் வாழ்ந்தனவாம். தரையில் வாழ்ந்த திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் அமெரிக்கத் தொல்லுயிர் ஆய்வாளர்களால் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோட்டின் அமைப்பைப் பார்க்கும்போது, அது ஒரு திமிங்கலத்தினுடையது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் கூடுதலாக காதுப் பகுதி மட்டும் காணப்படுகின்றதாம். அதனால் ஆரம்பத்தில் திமிங்கலங்கள் கடற்கரைகளில் வசித்திருக்க வேண்டும் என்று யூகித்திருக்கிறார்கள்.

கடலுக்குப் போன உயிரினம்

கடலில் இருந்த ஏராளமான மீன்களால் கவரப்பட்டு அவை மெல்ல மெல்ல கடலுக்குள் புகுந்து அங்கேயே குடியேறிவிட்டதாகக் கருதப்படுகிறது. இது சுமார் 4 முதல் 5 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

ஆச்சர்யமான தகவல்தான். அதனாலே திமிங்கலம் மட்டும் இன்றும் குட்டி போட்டு பால் கொடுக்கும் உயிரினமாக இருக்கிறது.

கடலுக்குள் மீன் இல்லைன்னு இனியும் அவை தரைக்கு வராமல் இருந்தா சரிதான்.

Leave a Comment