இந்தியாவில் வெந்நீர் ஊற்றுகள்

இயற்கை ஹீட்டர்

பூமியில் இருந்து பல இடங்களில் ஊற்று போன்று நீர் வெளியேறுகிறது. அப்படிப்பட்ட நீருடன் அவ்வப்போது நீராவியும் வெளிப்படுவதுதான் வெந்நீர் ஊற்று. இந்த உலகில் கிட்டத்தட்ட ஆயிரம் வெந்நீர் ஊற்றுக்கள் இருக்கின்றன.. இவற்றில் பாதிக்கும் மேலானவை அமெரிக்காவில்தான் இருக்கின்றன.

சாதாரண ஊற்றுகளை விட கெய்சர் எனப்படும் சில ஊற்றுகள் திடீரென நீரையும் நீராவியையும் வானில் பீறிட்டு வெளியேற்றுகின்றன.

எப்படி ஏற்படுகின்றன?

எரிமலைகள் இருக்கும் இடத்திலும், பாறைக்குழம்பு இருக்கும் இடத்திலும்தான் இந்த வெந்நீர் ஊற்றுக்கள் உருவாகின்றன. எரிமலை, பாறைக் குழம்பு போன்றவற்றால் தரைப் பரப்பின் அடியில் உள்ள நீர் மிகவும் சூடாகி கொதிநிலையை அடைகிறது. பின்னர் நீராவியாகி விரிவடையத் தொடங்கி நீரை மேல் நோக்கிப் பாய்ச்சுகிறது.  வெந்நீர் ஊற்றுக்கள் ஆயிரம் ஆண்டுகள் வரையிலும் செயல்படும் தன்மையில் இருக்கின்றனவாம்.

நிறம் மாறும் ஊற்றுகள்

வெந்நீர் ஊற்றுகள் தரையில் இருந்து 15 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை பீறிட்டு அடிக்கும். சீக்கிரம் குளிர்ந்துவிடும் இந்த வெந்நீரில் ஏராளமான கனிமங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உலகின் சில வெந்நீர் ஊற்றுகளில் நீர் நீலம், பச்சை, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் காணப்படும். இதற்கு காரணம் வெப்பத்தைக் தாங்கி வாழும் நுண்ணுயிரிகள் மற்றும் கனிமச் சத்துகள்.

வெந்நீர் குளியல்

சில நாடுகளில் வெந்நீர் ஊற்றுக்களை புனிதமான ஒன்றாக கருதி வழிபடவும் செய்கிறார்கள். ரோமானியர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள் போன்ற பல நாகரிகங்கள் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பது உடல் வலி, மூட்டு பிரச்சினைகள் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும் என்று நம்பினர். இன்று கூட ஜப்பானின் “Onsen” குளியல்கள் உலகப் புகழ்பெற்றவை.

ஐஸ்லாந்து போன்ற கடும் குளிர் நாடுகளில் கூட மக்கள் பனிக்குள் வெந்நீர் ஊற்றுகளில் குளிப்பார்கள். வெளியில் பனி பொழிந்தாலும், நீர் உடலை சூடாக வைத்திருக்கும். அதனால் ஐஸ்லாந்து “நெருப்பும் பனியும் சேர்ந்த நாடு” என்று அழைக்கப்படுகிறது.

சில நாடுகள் வெந்நீர் ஊற்றுகளின் நிலத்தடி வெப்பத்தை பயன்படுத்தி “Geothermal Energy” மூலம் மின்சாரம் தயாரிக்கின்றன. இது சுற்றுச்சூழலுக்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் பசுமை ஆற்றல் முறையாக கருதப்படுகிறது.

இந்தியாவில் வெந்நீர் ஊற்று

பெரும்பாலான வெந்நீர் ஊற்றுகளில் இருக்கும் சல்பர் காரணமாக அழுகிய முட்டை போன்ற வாசனை ஏற்படும். இது இயற்கையான ரசாயன மாற்றத்தால் உருவாகும் வாயுவால் ஏற்படுகிறது.

இந்தியாவில் மணிகரண் வெந்நீர் ஊற்று, தத்தாபாணி வெந்நீர் ஊற்று போன்ற இடங்களில் இயற்கையாகவே சூடான நீர் தொடர்ந்து வெளிவருகிறது. அடுத்த முறை சுற்றுலாவில் வெந்நீர் ஊற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Comment