புரட்சித்தலைவருக்கு நினைவிடம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 485

புரட்சித்தலைவரால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்டவர் மேயர் சைதை துரைசாமி. அதேநேரம், புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் பெருநகர சென்னை மேயராக்கப்பட்டவர். மேயர் பதவியில் இருந்து, அரசியல் தூய்மைக்கும் நல்ல நிர்வாகத்திற்கும் புதிய இலக்கணம் படைத்தவர் சைதை துரைசாமி.

தனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்த இருவருக்கும் சைதை துரைசாமி மிகச்சிறப்பாக நன்றிக்கடன் செலுத்தினார். அந்த வகையில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவிக்கு நினைவிடம் அமைப்பதற்கு உதவியதை சைதை துரைசாமியே பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், ‘’புரட்சித்தலைவரின் நினைவு நாளான 1987ம் ஆண்டு டிசம்பர் 24 அன்று நடந்த வரலாற்று சம்பவம் இன்றும் என் நினைவில் அப்படியே தேங்கிக்கிடக்கிறது. புரட்சித்தலைவரின் உடல் அருகில் நான் அழுது புலம்பி தவித்துக்கொண்டிருந்தேன். அடுத்து என்ன செய்வது என்பதே எனக்குப் புரியாமல் தடுமாறினேன்.

அந்த நிலைஇல் என்னை பார்த்த அண்ணன் ஆர்.எம்.வீரப்பன், என்னை அவருடன் வருமாறு அழைத்தார். ஏன், எதற்கு என்று புரியாமல் அழுதபடியே அவருடன் சென்றேன். அவர் என்னை காரில் அழைத்துக்கொண்டு மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலக அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தார்கள்.

அப்போதுதான் எதற்காக மெரினா கடற்கரைக்கு அண்ணன் ஆர்.எம்.வீரப்பன் அழைத்து வந்திருக்கிறார் என்பது புரிந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment