என்ன செய்தார் சைதை துரைசாமி – 484
வசதி படைத்தவர்கள் போன்று ஏழைகளும் விழா நடத்துவதற்கு சமூக நலக் கூடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அங்கு முழுமையான வசதிகள் இருக்க வேண்டும் என்பதை ஆய்வுகள் மூலம் மேயர் சைதை துரைசாமி தெரிந்துகொண்டார்.
ஏனென்றால், சமூகநலக் கூட மண்டபம் மட்டும்தான் விழாவுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. சமையல் பாத்திரம், சேர், டேபிள் என எல்லாமே வெளியில் இருந்து வாடகைக்கு எடுத்துவந்து பயன்படுத்தும் நிலை இருந்தது. இது மிகப்பெரும் தொந்தரவாக இருந்தது மட்டுமின்றி, இதற்காக அலைவதும் திரும்ப ஒப்படைப்பதும் அதிக செலவு வைப்பதாக இருந்தது.
ஆகவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சமூக நலக்கூடங்களிலும் தளவாடச் சாமான்கள், சமையல் பாத்திரங்கள், நாற்காலி, மேஜை என தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்குவதற்கு உத்தரவு போட்டார் மேயர் சைதை துரைசாமி.
எனவே, தகுந்த ஆதாரங்களுடன் முன்பதிவு செய்பவர்களுக்கு, டெபாசிட் கட்டணம் மட்டும் வசூலித்து மண்டபம் இலவசமாக வழங்கப்படும். அதோடு விழாவுக்குத் தேவையான தளவாட ச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், மேசை, நாற்காலி போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். பெற்றுக்கொண்ட பொருட்கள் சரியாக ஒப்படைக்கப்பட்டதும், டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.
அது மட்டுமின்றி, திருமண மண்டபத்திற்குத் தேவையான தண்ணீர் வசதியும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் ஏழை மக்களும் நல்ல வசதிகள் நிரம்பிய மாநகராட்சி மண்டபத்தில் திருமணம் செய்துகொள்ள முடிந்தது. இதையடுத்து மேயர் சைதை துரைசாமி காலகட்டத்தில் சமூகநலக் கூடங்களில் ஏராளமான விழாக்கள் நடைபெறத் தொடங்கின. ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையிலான சமூகநலக்கூடம் சீர்திருத்தம் மேயர் சைதை துரைசாமியின் தனிப்பட்ட சாதனை என்பதை யாரும் மறுக்கவே முடியாது.
- நாளை பார்க்கலாம்.
