என்ன செய்தார் சைதை துரைசாமி – 483
மேயர் சைதை துரைசாமி சமூகநலக் கூடத்தை பதிவு செய்வதில் இன்னொரு புரட்சியும் செய்தார். அதாவது, ஆன்லைனில் யார் வேண்டுமானாலும் எப்போது வேணுமானாலும் சமுதாய நலக் கூடம் எந்தெந்த நாட்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்தார்.
இதன் மூலம் எந்தெந்த நாட்களில் சமூகநலக் கூடம் காலியாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, நிகழ்ச்சிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்துவதற்கு வழி பிறந்தது. அதோடு, தங்கள் பகுதியைச் சேர்ந்த சமூகநலக் கூடத்தில் தேதி புக் ஆகியிருந்தால், வேறு மண்டலத்தில் இருக்கும் சமூகநலக் கூடத்தைத் தேர்வு செய்யவும் முடிந்தது.
மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கைகளால் சமூகநலக் கூடங்களை யாரும் தவறாகப் பயன்படுத்த முடியாமல் போனது. அதிகப்படியான தொகை வசூலிக்க முடியவில்லை. அத்துடன் உண்மையான பயனாளிகளைத் தவிர வேறு யாரும் சமுதாய நலக் கூடத்தில் நுழைய முடியாமல் போனது.
இந்த நேரத்தில் சமூகநலக் கூடத்தை நிறைய பேர் நெருங்குவதற்கு விருப்பம் காட்டாமல் இருப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. ஏனென்றால், சமூகநலக் கூடம் வசதியான இடத்தில் அமைந்திருந்தாலும், உள்ளே எந்த வசதிகளும் போதிய அளவு இல்லை என்பது தெரியவந்தது. இதனை நேரில் சென்று ஆய்வு செய்து அறிந்துகொண்டார்.
இதையடுத்து, சமூகநலக் கூடத்தில் விஷேசங்கள் செய்யவிருக்கும் பொதுமக்கள் முழுமையாக பயன் அடையும் வகையில் முழுமையான வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு மேயர் சைதை துரைசாமி தானே முன்வந்தார்.
- நாளை பார்க்கலாம்.
