இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி

என்ன செய்தார் சைதை துரைசாமி – 482

சமுதாய நலக்கூடங்களின் பயன்பாடு உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே போய்ச்சேர வேண்டும் என்பதற்கு பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார் மேயர் சைதை துரைசாமி. குறிப்பாக  டெக்னாலஜி உதவியுடன் இந்த முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்வந்தார்.

அந்த வகையில் முன்பதிவு செய்வதற்கு நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, நிச்சயதார்த்தம் என்றால் மணமகன் அல்லது மணமகள் ஒப்புதலுடன் பெற்றோர் கடிதம் இருக்க வேண்டும். மஞ்சள் நீராட்டு விழா, பெயர் சூட்டுவிழா, திருமணம் போன்று எந்த விழா என்றால், அதற்கான ஆதாரம் மற்றும் குடும்ப அட்டை  சான்றிதழ்களுடன் பதிவு செய்தால் மட்டுமே அவருக்கு சமூகநலக் கூடம்  இலவசமாக வழங்கப்படும்.

பதிவு செய்வதற்கும் பதிவேற்றம் செய்வதற்கும் மாநகராட்சி ஊழியரே முழுமையாக உதவி செய்வார் என்பதால், ஏழைகளும் படிக்காதவர்களும் இந்த ஆதாரங்களைக் கொடுப்பதற்கு எந்த சிக்கலும் எழவில்லை.

சென்னை  மாநகராட்சி வரலாற்றில் இதுவரை எந்த மேயரும் இதுபோன்ற நிபந்தனைகள் விதித்தது இல்லை, அதற்கு முயற்சிகள் எடுத்ததும் இல்லை. இந்த அதிரடிக் கட்டுப்பாடுகள் காரணமாக அதுவரை பயன் பெற்றுவந்த இடைத் தரகர்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டனர்.

மாநகராட்சி மண்டபம் மூலம் ஒரு சிலர் மட்டும் ஆதாயம் அடைவதும், மக்கள் ஏமாற்றப்படுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டது. சமுதாய நலக்கூடத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த அத்தனை கட்சிக்காரர்களின் முறைகேடான வருமானத்திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த சீர்திருத்தம் எல்லாமே நியாயமானவை என்பதால் எதிர்க்கட்சியினராலும் இதற்கு எதிர்ப்பு காட்ட இயலவில்லை.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment