ஞானகுரு கவுன்சிலிங்
கனவில் நிறைய பேருக்கு வித்தியாசமான காட்சிகள் தோன்றுவதுண்டு. அதாவது, அறிமுகமில்லாத இடம், சந்திக்காத நபர்கள், நடக்காத நிகழ்வு என்று கனவில் ஏதேதோ நடக்கும். புதிய ஊர் அல்லது புதிய நபரை சந்திக்கும்போது, இதற்கு முன்பு எங்கேயோ பார்த்தது போன்று மங்கலான நினைவுகள் வரும். இதை தேஜாவூ என்பார்கள்.
ஆசை கனவுகள்
அதாவது, ஆழ்மனதில் இருக்கும் நிறைவேறாத ஆசைகளும் அன்றாட வாழ்வில் நடக்கும் செயல்களும் ஏதாவது ஒரு இடத்தில் உரசிக் கொள்ள நேர்ந்தால், உண்மை போலவே தோற்றமளிக்கும் கனவுகள் தோன்றும் என்பது கனவு ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
நோய் கனவுகள்
காய்ச்சல், தலைவலி போன்ற நோயினால் பாதிக்கப்பட்டு மாத்திரை, மருந்து சாப்பிட்டுத் தூங்குபவர்களுக்கு அதிகமான கனவுகள் வருவது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைவலியுடன் படுப்பவர்கள் குகைகளில் தவழ்வது, சரியான காற்றோட்ட வசதியில்லாத இடங்களில் தூங்குவது போன்ற கனவுகள் பயமுறுத்தும்.
அச்சக் கனவுகள்
தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு படிப்பு தொடர்பான கனவுகள் நிறைய வருகின்றன. பாலியல் ஆசை கனவுகள் பத்து விழுக்காடு வருகின்றன என்றும், ஒரே கனவு சுமார் 65% விழுக்காடு மக்களுக்கு மீண்டும் மீண்டும் வருவதாகவும் தெரிகிறது.
யாரோ துரத்துவதாகவும், மிகவும் தாமதமாக செல்வதாகவும், எங்கிருந்தோ விழுந்து கொண்டிருப்பது போலவும், பாலியல் சார்ந்த செயல்களும், பறப்பது போலவும், தேர்வில் தோல்வியடைவது போலவும் எல்லாம் கனவுகள் காண்பது உலக அளவில் அதிகம் காணப்படும் பொதுவான கனவு.
கெட்ட கனவுக்குப் பயந்து தூக்கமின்றி தவிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் கன்வுசிலிங் மூலம் தீர்வு காண வேண்டியது அவசியம்.
