கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதா?

ஞானகுரு கவுன்சிலிங்

எதிர்காலத்தில் நிகழப்போகும் செயல்களையே, கனவுகள் காட்டுகின்றன என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். கிருஷ்ணர், புத்தர், இயேசு  பிறக்கும் முன்பு அவர்களுடைய அம்மாக்கள் கனவு கண்டதாக சமய நூல்கள் தெரிவிக்கின்றன. எனவே மக்கள் கனவை நம்புகிறார்கள்.

வித்தியாச பலன்கள்

கல்யாண வீடு போன்ற நல்ல விஷயங்களைக் கனவில் கண்டால் கெட்டது நடக்கப்போகிறது என்றும் சாவு, நோய் போன்ற கனவு கண்டால் நல்லது நடக்கும் என்றும் நினைக்கிறார்கள்.

கடல், ஆறு, அருவி போன்ற நீர்நிலைகளைக் கண்டால் மனதில் அமைதி, நிம்மதி கிடைக்கும் என்றும் பாம்பு கனவில் வந்தால் வியாதி வரப்போகிறது என்று அர்த்தம் சொல்கிறார்கள். கீழே விழுவது போன்று நிறைய பேர் கனவு காண்கிறார்கள். துரத்துவது, ஓடுவது, விரட்டுவது போன்ற கனவுகள் எல்லாமே வர இருக்கும் பிரச்னையை முன்கூட்டியே காட்டுகிறது என்கிறார்கள்.

பாலியல் கனவு

பாலியல் கனவு நிறைய பேருக்கு வருகிறது. இவை பெரும்பாலும் நிறைவேறான ஆசைகள் என்கிறார்கள். இப்படி கனவுகளுக்கு எத்தனையோ பேர் பலன்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமும் அறிவியலும் கனவுகளை ஆழ்மனதின் ஆசைகள் என்றும் மனதில் இருக்கும் ஆசை, பயம், சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமே. இதை ஆய்வு செய்வதற்கு அவசியமே இல்லை என்கிறார்கள்.

Leave a Comment