கோடை டிப்ஸ்
கோடை காலத்தில் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்ததும் உடல் சூட்டைத் தணிப்பதற்கு ஜில்லென்று தண்ணீர் குடிப்பதற்கு ஆசை வரும். அதனால் பாட்டிலில் பிடித்து ஃபிரிட்ஜ்க்குள் வைத்திருக்கும் பாட்டிலை எடுத்து அப்படியே மடக் மடக்கென குடிப்பார்கள். தண்ணீர் பாட்டில் இல்லையென்றால் ஜில்லென்று இருக்கும் குளிர்பானத்தைக் குடிப்பார்கள்.
ஜில்லென்று ஆபத்து
இப்படி ஜில்லென்று குடித்ததும் உடலுக்கு ரொம்பவே ஆனந்தமாக இருக்கும். வெளியே போய்விட்டுத் திரும்பிய களைப்பு போனதாக உணரமுடியும். என்றாவது ஒரு நாள் இப்படி குடிப்பதால் எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆனால், தொடர்ந்து தினமும் அல்லது ஒரே நாளில் பல தடவை இப்படி ஜில் வாட்டர் குடிப்பது மருத்துவ ரீதியில் சரியான செயல் இல்லை.
உடல் குளறுபடி
ஏனென்றால் உடல் சூடாக இருக்கும்நிலையில் குளிர்ந்த நீரைப் பருகுவதால் சுவாசப் தொண்டை வலி மற்றும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சளி பிடிப்பதற்கு வாய்ப்பு உண்டாகிறது. அதோடு ஜில் நீர் குடிக்கும்போது அது உடலின் வேகஸ் நரம்பைத் தூண்டி, இதயத் துடிப்பைக் குறைக்கக்கூடும். மேலும், ஜீரண சக்தியும் குறைந்துவிடும்.
எனவே, அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீர் குடிப்பதே போதும். வெளியே போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் தண்ணீர், குளிர்பானம், மோர் என எதையும் குடிக்க வேண்டும். சில நிமிடங்கள் அமைதியாக இருங்கள். இதனால் அறையின் வெப்பத்திற்கு உடல் நிலை அட்ஜெஸ்ட் ஆகிவிடும். அதன்பிறகு சாதாரண நீர் அல்லது மண்பானை நீர் குடிக்கலாம்.
மண்பானை நீர்
மண்பானையில் உள்ள நுண்துளைகள் இயற்கையாகவே நீரைச் சுத்திகரித்து, ஒரு குறிப்பிட்ட அளவு குளிர்ச்சி தரும் என்றாலும் இது ஐஸ் வாட்டர் போல ஆபத்தானது அல்ல.
எனவே, வெயிலில் சென்று வந்தவுடன் உடனடியாகக் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். வெதுவெதுப்பான நீர் குடிப்பது ரொம்பவே நல்லது. வெதுவெதுப்பான நீர் உடலின் உட்புற வெப்பத்தை லேசாக உயர்த்தி, வியர்வை மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.
சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். எனவே, வெப்பத்தை வெதுவெதுப்பான நீரால் விரட்டியடியுங்கள். இதுவே, ஆரோக்கியத்திற்கு நல்லது.
