என்ன செய்தார் சைதை துரைசாமி – 480
ஏழைகளும், எளிய மக்களும் விழா பணக்காரர்கள் போன்று மண்டபத்தில் வீட்டு விசேஷங்களைக் கொண்டாட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே மாநகராட்சியால் சமூகநலக் கூடங்கள் நடத்தப்படுகிறது.
ஆனால், மேயர் சைதை துரைசாமியின் காலத்திற்கு முன்பு அந்த சமூகநலக் கூடங்கள் அடாவடி நபர்களின் கைவசம் இருந்ததால் ஏழை மக்களுக்கு ஒரு பயனும் கிடைக்காத நிலை இருந்தது. ஏன்றால் சமூகநலக் கூடத்தை பதிவு செய்யும் முறையில் ஏகப்பட்ட முறைகேடு இருந்தது. அதாவது சமுதாயக் கூடம் இருக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் கூட்டு சேர்ந்து அல்லது தனியாக சொந்தம் கொண்டாடும் அளவுக்கு முறைகேடு செய்தார்கள். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் திருமண முகூர்த்த தேதிகளை எல்லாம் கணக்கிட்டு, அந்தத் தினங்களில் விழா நடத்த இருப்பதாக முன் பணம் செலுத்திவிடுவார்கள்.
அதன் பிறகு மண்டபம் தேவை என்று யாரேனும் தேடிவந்தால், முன்பதிவு செய்து வைத்திருக்கும் நபர் கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொண்டு, இடத்தை ஒப்படைப்பார். இதற்கு, மாநகராட்சி அலுவலரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தார். இந்த நிலையின் காரணமாக லோக்கல் புள்ளிகள் காலம் முழுவதும் கொள்ளை அடித்து, பொதுமக்களை சுரண்டி வாழ்ந்துகொண்டு இருந்தனர்.
மேயர் பதவிக்கு வந்தவுடன் சைதை துரைசாமிக்கு இந்த தகவல் தெரியவந்தது.
தன்னுடைய காலத்தில் சமூகநலக் கூடங்களின் பயன்பாடு பொது மக்களுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று முடிவு எடுத்தார். வேளச்சேரியில் ஏழைகள் பயன்படும் வகையில் புரட்சித்தலைவி அம்மா திருமண மண்டபத்தை நடத்திவருகிறார் மேயர் சைதை துரைசாமி. அதே பாணியில் சமூகநலக்கூடங்களின் முழுமையான பயன்பாடும் கிடைப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.
