என்ன செய்தார் சைதை துரைசாமி – 476
பொதுவாகவே மேயர் பதவிக்கு வருபவர்கள் அலங்காரப் பொம்மையாகத்தான் இருப்பார்கள். அதிகாரிகள் காட்டும் இடங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு, மாநகராட்சிக் கூட்டங்களில் எழுதிக்கொடுத்த அறிக்கைகளைப் படித்துவிட்டுப் போய்விடுவார்கள். நிர்வாகத்தை அதிகாரிகளே கையில் எடுத்துக்கொள்வார்கள்.
அதனாலே மேயர் சைதை துரைசாமிக்கு முந்தைய காலகட்டங்களில் எக்கச்சக்க முறைகேடுகள் நடந்தன. முந்தைய காலகட்டத்தில் அதாவது 1996 – 2001, 2006 – 211 காலகட்டத்தில் எப்படியெல்லாம் நிதி இழப்புகள் ஏற்பட்டன என்பது குறித்து தணிக்கைத் துறை அளித்த தகவல்களைப் படித்து மேயர் சைதை துரைசாமி அதிர்ச்சி அடைந்துவிட்டார்.
அந்த தணிக்கைத் துறை சுட்டிக்காட்டிய சில தகவல்கள் மட்டும் இங்கே…
- திடக்கழிவு மேலாண்மை துறையில் ரூ.22 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை விவரித்துள்ளது. இந்த இழப்பு, அப்போது குப்பை அகற்றும் பணியில் இருந்த ஒனிக்ஸ் மற்றும் நீல்மெட்டல் நிறுவனங்கள் நடத்திய பகல் கொள்ளை ஆகும்.
- குப்பை அகற்றுவதற்காக ஓனிக்ஸ் நிறுவனத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.648 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. எடையைக் கூட்டி அதிக லாபம் சம்பாதிப்பதற்காக, குப்பையுடன் கட்டிட இடிபாடுகளையும் சேர்த்து, எடைபோடடு கொள்ளை லாபம் அடைந்தார்கள்.
- ஒப்பந்த விதிப்படி, குப்பை கொட்டும் இடத்தில் உள்ள எடை மேடையில்தான் எடை பார்க்க வேண்டும். அந்த எடை மேடை பழுது என்று காரணம் காட்டப்பட்டு, தனியார் எடை மேடையில் எடை குறிக்கப்பட்டது. அந்த ரசீதுகளில் அளவு, எடை போன்றவை தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இதற்காக வேண்டுமென்றே குப்பை கொட்டும் இடத்தில் உள்ள எடை மேடை பழுது பார்க்கப்படவில்லை.
- தமிழக அரசின் பொது விற்பனை வரிச்சட்டத்தின் கீழ் அனைத்து ஒப்பந்த வேலைகளில் இருந்தும் இரண்டு ரூபாய் விற்பனை வரியாக பிடித்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒனிக்ஸ் நிறுவனத்திற்கு பிடித்தம் செய்யப்பட்ட விற்பனை வரி, நிதியில் சேர்க்கப்படவே இல்லை.
- இயந்திரப் பொறியியல் துறையில் 11.50 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வாகனங்களை சீர் செய்யாமல், தனியார் நிறுவனங்களில் பழுதுபார்க்கப்பட்டு, கூடுதல் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
- அதேபோன்று வாகன பராமரிப்பில் அரசு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பிற்கு மேல் எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகள் செய்யப்பட்டுள்ளது.
- தென்சென்னை வாகனப் பணிமனையில் அசோக் லேலண்ட் கனரக வாகனங்களுக்கு உதிரிப் பாகங்கள் உற்பத்தியாளரிடம் வாங்கினால் 22.50 சதவீதம் தள்ளுபடி தரப்படும். ஆனால் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தனியார் நிறுவனங்களிடம் உதிரிப் பாகங்கள் பெற்றதால் நிதி இழப்பீடு.
- நாளை பார்க்கலாம்.
