எத்தனை பேரை குருவாக ஏற்கலாம்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : எப்படிப்பட்ட குருவை தேட வேண்டும்? குருவை வணங்குவது தவறா…?

எஸ்.ஆனந்தவல்லி, விருதுநகர்.

ஞானகுரு :

விரைவில் நீங்கள் விரும்பும் வாழ்க்கை கிடைக்கப்போகிறது என்று நம்பிக்கை தரும் குருவை நம்பாதீர்கள். சுகமான வாழ்க்கையை வெறுக்கச் சொல்லும்  குருவை நம்பாதீர்கள். உங்களிடம் காணிக்கை பெற்று, அதனை இறைவனுக்கும் இல்லாதவருக்கும் கொடுக்கப்போகிறேன் என்று பணம் பறிக்கும் குருவை நம்பாதீர்கள். அரசியல்வாதிகளும், சினிமா கலைஞர்களும் என் பக்தர்கள் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் குருவை நம்பாதீர்கள்.

உண்மையான குரு வழிகாட்டியாக மட்டுமே இருப்பார். தொந்தரவுகளும், பிரச்னைகளும் வராமல் தடுக்கலாம் என்று பொய் சொல்ல மாட்டார். ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் இன்பமும் துன்பமும் வந்துகொண்டே இருக்கும். தெரியாததை தெரியாது என்று சொல்பவரே உண்மையான குரு. எல்லாம் தெரியும் என்று சொல்பவரை நம்பாதீர்கள். ஆயிரம் பேரைக் கூட குருவாக ஏற்றுக்கொள்ளலாம். வணங்கலாம். ஆனால், அவர் சொல்வதை கேள்வி கேட்ட் ஏற்றுக்கொள்ளுங்கள், வணங்குங்கள். ஆனால், அப்படியே பின்பற்றாதீகர்கள். உங்களுடைய குரு நீங்கள் மட்டும்தான்.

Leave a Comment