சுண்ணாம்பு மகிமை தெரியுமா?

சுவர்களுக்குப் பாதுகாப்பு

இன்று இண்டீரியர் என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்கு விதவிதமாக அழகழகாக பெயிண்ட் அடிக்கிறார்கள். ஆனால் முன்பு வீட்டுக்கு எல்லோரும் சுண்ணாம்புதான் அடிப்பார்கள். அது ஏன் என்று தெரியுமா?

சுண்ணாம்பின் காரத்தன்மையாலும் நெடியாலும் சுவர்களின்  இடுக்குகளில் உள்ள நுண்ணிய பூச்சிகள் மடிந்து விடும்.அதை விட  சுண்ணாம்பின் வெண்மை நிறத்துக்கு ஒரு விசேஷத்தன்மையும் உண்டு.
அதாவது வெள்ளை நிறமானது வெப்பத்தை ஈர்ப்பதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் வெப்பத்தை திருப்பியனுப்பி விடும். அதனால் வீட்டுக்குள் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது.

நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலிலும் அர்த்தமுள்ள காரணம் இருக்கவே செய்கிறது.

கரி, உப்பு வைத்து பல் துலக்கினார்கள். அது தவறு என்று பேஸ்ட் கொண்டுவந்தார்கள். இப்போது பேஸ்ட்டில் உப்பு, கரி கலந்து தருகிறார்கள்.

பழைய சோறு வேண்டாம் என்றார்கள், இப்போது அதையே மருந்தாகத் தருகிறார்கள். முந்தைய காலத்தில் சொன்னதை அப்படியே ஏற்கவேண்டாம், அலட்சியப்படுத்தவும் வேண்டாம்.

Leave a Comment