நகத்தில் நலம் பார்க்கலாம்

அழகுதரும் ஆரோக்கியம்

நகம் எதற்காக இருக்கிறதென்று கேட்டால், நெயில் பாலிஷ் போட்டு அழகு காட்டுவதற்கு என்றுதான் சொல்வார்கள். உண்மை அதுவல்ல.

மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் நகத்தை சரியாகப் பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டும்தான் அழகு சாதனமாகப் பார்க்கிறான். விரல் நுனி வரையிலும் பரவயிருக்கும் நரம்புகளையும் ரத்தக் குழாய்களையும் பாதுகாப்பதுதான் நகங்களின் முக்கியமான பணி.

நகங்களை வைத்து உடல் நலத்தையும்  அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். 

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ரத்தச் சோகை ஏற்பட்டால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். இன்னும் பல நோய்களை நகத்தில் கண்டுபிடிக்க முடியும். எனவே, நகத்தில் ஏதேனும் சிக்கல், குறை தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள். அவர் சரியான காரணத்தைச் சொல்லிவிடுவார்.

Leave a Comment