ஆச்சர்ய உண்மை
செலவுக்கு அடிக்கடி பணம் கேட்டால், ‘’பணம் மரத்திலா காய்க்கிறது” என்று பெரியவர்கள் கேட்பதுண்டு.
மரத்தில் பணம் காய்க்குதோ இல்லையோ தங்கம் காய்க்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
தங்கம் காய்க்குமா என்ன..?
ஆமாம். வடக்கு ஆஸ்திரேலியாவில் பூமிக்கு அடியில் தங்கம் இருப்பதாக நீண்ட காலமாகவே சொல்லப்பட்டது. அதனால் அங்கே ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியில் வளர்ந்திருந்த சில யூக்கலிப்டஸ் மரத்தின் கிளைகளிலும், இலைகளிலும் தங்கத் துகள்கள் கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இலைகளில் தங்கம் வந்ததற்கு காரணமும் சொல்கிறார்கள்.
யூக்கலிப்டஸ் மரத்தின் வேர் பூமிக்கடியில் ஈரப்பதத்தை தேடி அதிக ஆழத்துக்கு சென்றிருக்கும். அப்போது ஆழத்தில் படிந்துள்ள தங்கத்துகள் கலந்த நீரை மரத்தின் வேர்கள் உறிஞ்சியிருக்கும். மரத்தின் வளர்ச்சிக்கு தங்கம் தேவையில்லை என்பதால், அவை இலைகளின் வழியாக வெளியேற்றப்பட்டிருக்கலாம்’ என்கிறார்கள்.
தங்கம் மரத்தில் கிடைக்கிறது என்றால் ரொம்பவே சூப்பர். சுரங்கம் வெட்டி கஷ்டப்பட வேண்டாம். வீட்டுக்கு வீடு மரம் வளர்த்தால் போதும்.
