குப்பை உணவு
இப்போது சின்னஞ்சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒரு உணவை, குப்பை உணவு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்… அது எந்த உணவு என்று தெரியுமா?
ஃபாஸ்ட் ஃபுட் ஐட்டமா?
கிட்டத்தட்ட அதுதான். இப்போது சின்னப்பிள்ளைகளுக்கு நூடுல்ஸ்தான் விருப்ப உணவாக இருக்கிறது. இதில் ஏகப்பட்ட சத்துக்களும் நன்மையும் இருப்பதாக சொல்லப்படுகிறது. உண்மையில் இந்த உணவில் எந்தச் சத்தும் இல்லை, குழந்தையின் உடல் நலனுக்கு எந்த வகையிலும் ஏற்றது இல்லை என்றும் சொல்கிறார்கள் குழந்தை நல மருத்துவர்கள்.
இந்த உணவில் அளவுக்கு மீறி சோடியமும் கொழுப்பும் இருப்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதவிர மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் போன்றவை இருக்கிறது. இந்த உணவால் குழந்தைகளுக்குத் தேவையான போஷாக்கு கிடைப்பதில்லை என்பதால்தான், நூடுல்ஸை குப்பை உணவு என்கிறார்கள்.
குழந்தைகள் ஆசைப்பட்டால் மாதம் ஒரு முறை வீட்டில் செய்துகொடுங்கள், அதற்கு மேல் இல்லவே இல்லை என்று உறுதியாகச் சொல்லுங்கள்.
