பறை முழங்கட்டும்
டன் டன் டண்டனக்கு… டன் டன் டண்டனக்கு… இது என்ன இசை என்று சொல்ல முடியுமா? தமிழ் இசைக் கருவி என்று அறியப்படும் பறை ஓசைதான் இது. பறை என்பது தோலால் செய்யப்பட்ட மேளம். குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் போன்ற ஐவகை திணைகளுக்கும் தனித்தனியே பறை இருந்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனமாக பறை இருந்துள்ளது. அதனால் பறையடித்து தகவல் சொல்லி இருக்கிறார்கள். இப்போது நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தப்பு என்றும் அறியப்படும் பறை இசைக்கருவியில் மரத்தால் செய்யப்பட்ட வட்டச் சட்டம், தோல் மற்றும் உலோகத்தகடு இருக்கின்றன. பறையை இசைக்க இரண்டு விதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இடது கையில் இருப்பது சிம்புக் குச்சி என்றும் வலது கையில் இருப்பது அடிக்குச்சி என்றும் அழைக்கப்படுகிற்து.
இந்தக் குச்சிகளால் மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தனித்தனி அடி இசைக்கப்படுகிறது. ஒவ்வொரு அடியும் இடி என்றால் அது பறை மட்டும்தான். கேட்டுப் பாருங்கள், ஜிவ்வென்று அள்ளிக்கொள்ளும்
