இனி, கண்களால் பேசுங்கள்

கைரேகை அவுட்

பாஸ்போர்ட்,, பத்திரப்பதிவு, காவல்துறை போன்ற அரசு அலுவலகங்களில்  ஒருவரது அடையாளங்களைப் பதிவதற்கு இப்போது கை ரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் கைரேகைக்குத் தேவையே இருக்காது. ஏன் தெரியுமா?

தெரியும். கண் விழியை பதிவு செய்வதுதான் நவீன டெக்னிக். இப்போதே வளர்ந்த நாடுகளில் எல்லாம் இது நடைமுறைக்கு வந்துவிட்டது.

சரிதான், கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழியும்  ஒவ்வொருவருக்கும் வேறுபட்டுத்தான்  இருக்கிறது.

அரசு அலுவலகங்களில் இந்த முறை வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் இப்போதே  கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் கருவிழி பாஸ்வேர்டாக புகுந்துவிட்டது. இனி கம்ப்யூட்டர், லேப்டாப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவைகளை கண் விழி மூலமே திறக்க முடியுமாம்.  

ஏமாற்றுபவர்களுக்கு இனி சிக்கல்தான்.

Leave a Comment