மகிழ்ச்சியுடன் சாப்பிடுங்கள்.
பழநி என்றாலும் எல்லோருக்கும் என்ன ஞாபகத்துக்கு வரும்.? நிச்சயமாக மொட்டையும் பஞ்சாமிர்தமும்தான்.
ரொம்ப சரி. பஞ்சாமிர்தம் என்றால் ஐந்து அமிர்தம் என்று பொருள்.
பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் ஐந்து பொருட்களும் அமுதத்துக்கு இணையாக சொல்லப்படுகிறது. பழம், வெல்லம், நெய், பால், தேன் ஆகிய ஐந்து பொருட்களின் கலவைதான் பஞ்சாமிர்தம்.
இதில் இருக்கும் பால் ஒரு முழுமையான உணவு. அதாவது பாலை மட்டும் சாப்பிட்டே உயிர் வாழலாம். குழந்தைகள் அப்படித்தான் உயிர் வாழ்கிறார்கள். அதேபோல் வெல்லம் உடலுக்கு வலிமை கொடுக்கிறது.
பழம் என்பது வாழைப்பழத்தைத்தான் குறிக்கிறது. இது சகல உயிர்களும் விரும்பக்கூடிய ஒன்று. உடலுக்கு இதம் தருவது. தேன் கபத்தை இல்லாமல் செய்துவிடும். நெய், ஆயுளைக் காப்பாற்றும்.
இந்த ஐந்து பொருட்களுக்கும் தனித்தனி சிறப்பு இருப்பதால்தான், இதனை ஒன்றுசேர்த்து பஞ்சாமிர்தம் என்கிறார்கள். கொஞ்சமாக சாப்பிடுங்கள், மகிழ்ச்சி தரும். அதிகம் சாப்பிட்டால் நிச்சயம் ஆபத்தைக் கொண்டுவரும்.
