மாடியில் தோட்டம் வீட்டுக்குள் குளுகுளு

காய்கறிக்குப் பஞ்சமில்லை

கோடை காலத்தில் வீட்டுக்குள் படுத்து இருந்தாலும் உச்சி வெயில் காரணமாக உடல் அனல் போல் கொதிக்கும். இந்த நிலையை மாற்றுவதற்கு ஏ.சி., ஏர்கூலர் போன்றவற்றைத் தேடி ஓடுவதைவிட எளிய சிம்பிளான வழி இருக்கிறது.

அது என்ன வழி?

வீட்டு மாடியில் தோட்டம் போடுவதுதான். கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, கீரைகள் போன்றவற்றை மாடியில் சுலபமாக வளர்க்க முடியும். இந்த செடிகளை வளர்க்கும்போது ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் கிடைப்பதுடன் வீட்டின் வெப்பமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பதற்கு அரசு உதவியும் கிடைக்கிறது. தோட்டம் அமைப்பதற்குத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதின் பைகள் போன்றவற்றை அரசு மானிய விலையில் கொடுக்கிறது. மாடியில் நிறைய இடம் இருந்தால்தான் வளர்க்கமுடியும் என்பதில்லை, 200 சதுர அடி இடமே போதுமானது. மொட்டை மாடியெங்கும் பச்சைத் தோட்டமாகிவிட்டால் சூரியனைப் பார்த்து நாம் கலங்கவேண்டியதே இல்லை.

மாடியில் கீரைகள், காய்கறிகள் வளர்ப்பது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருப்பது மட்டுமின்றி, வருமானத்திற்கும் வழிவகை செய்கிறது. எனவே, இடம் இருப்பவர்கள் காய், கறித்தோட்டம் போடுவதற்கு இப்போதே ஏற்பாடு செய்யுங்கள்.

Leave a Comment