நிலத்தில் புதைந்துகிடக்கும் ஆபத்து

ஏப்ரல் 4 – நிலக்கண்ணிகள் விழிப்புணர்வு நாள்

கண்ணிவெடி என்றால் அனைவருக்குமே தெரியும். அதாவது நிலத்திற்கு உள்ளே புதைத்து அல்லது மறைத்து வைக்கப்படும் வெடிபொருள். எதிரிகளுக்கு காயங்களை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் முன்னேற்றத்தைத் தடைசெய்வதற்காகவும் கண்ணிவெடிகள் புதைக்கப்படுகின்றன.

உலகில் அத்தனை நாடுகளும் போர் காலத்தில் இந்த யுத்தியைக் கையாள்கின்றன. இதில் சிக்கிக்கொள்ளும் மனிதர்கள் உயிரை இழக்க வேண்டியிருக்கும். மனிதர்கள் மட்டுமின்றி, எதுவுமறியாத விலங்குகளில் இதில் சிக்கி உயிர் இழக்கின்றன.

யுத்தம் முடிவடைந்தபிறகு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படுவதில்லை. கண்ணிவெடிகள் எங்கு புதைக்கப்படுகிறது என்பது குறித்து ஆவணப்படுத்துவதில்லை என்பதால் எளிதில் மக்கள் மாட்டிக்கொள்கிறார்கள். நிலத்தில் புதைந்திருக்கும் இந்த ஆபத்தில் சிக்கிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளவும் தடுக்கவும்தான் ஏப்ரல் 4-ம் தேதி நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த கண்ணிவெடிகளினால் பாதிக்கப்பட்ட நபர், குடும்பங்களின் உரிமைகளும் நலன்களும் பாதுகாக்கப்படுவதற்காக யுனிசெப் நிறுவனம் இன்றைய தினத்தை  அர்ப்பணித்துள்ளது.

கண்ணிவெடிகளுக்கு எதிராக 1977-ம் ஆண்டு 122 நாடுகள் ஒன்றுகூடி இந்த ஆபத்துகளிலிருந்து தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டன. இன்னமும் ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் உலகெங்கும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றன. கண்ணிவெடி இல்லாத உலகம் உருவாக நாமும் துணை நிற்போம்.

Leave a Comment