மணல் முத்தாகும் ஆச்சர்யம்..!

காத்திருப்பின் மகிமை

குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் சாதாரண மணல் கூட மாபெரும் மதிப்புள்ள பொருளாக உருமாறும் என்பது உண்மைதான். முத்துக்கள் எப்படி உருவாகிறது என்று தெரியுமா?

சிப்பிகள் வாய் திறக்கும் நேரத்தில், மணல் அல்லது ஏதாவது ஒரு அந்நியப் பொருள் உள்ளே நுழைந்துவிடுவதுண்டு. அந்நியப் பொருள் காரணமாக சிப்பியின் உட்பாகத்தில் இடையறாத உறுத்தல் ஏற்படுகிறது. அதனால் சிப்பி, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழிகிறது. அந்தப் பொருள் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளாகப் படிந்துவிட, அது குறிப்பிட்ட காலம் கடந்ததும் விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது.
சீனர்கள் இப்போது செயற்கை முறையில் முத்துக்களை தயாரிக்கிறார்கள். அதாவது சிப்பியின் வாய் வழியே சிறு தானியங்கள், சின்னஞ்சிறு புத்தர் சிலைகளை உள்ளே தள்ளிவிடுகிறார்கள். இவையும் முத்துக்களாக மாற்றம் அடைகின்றன. ஆனால் இப்படி பெறப்படும் முத்துக்களைவிட, இயற்கை முறையில் கிடைக்கும் முத்துக்களின் மதிப்புதான் இன்னமும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

Leave a Comment