இயற்கை பேரழிவை தடுக்க முடியாது, கட்டுப்படுத்துவோம்

இன்று உலக வானிலை தினம்

மே மாதம் என்றால் வெயிலடிக்க வேண்டும் டிசம்பர் மாதம் என்றால் பனி இருக்க வேண்டும். இந்த பருவநிலை மாறாமல் இருந்தால்தான், மழையை நம்பி விதை விதைக்கவும் சரியான நேரத்தில் அறுவடை செய்யவும் முடியும். இந்த வானிலை சீராக இருந்தால்தான், மக்களுடைய வாழ்க்கையும் சீராக இருக்கும். இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான், மார்ச் 23 அன்று உலக வானிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதற்காக உலக வானிலை அமைப்பு 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியா உட்பட 191 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். காலநிலை, வானிலை, தண்ணீர் போன்றவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இயற்கை பேரழிவுகளைத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவது போன்ற பணி மேற்கொள்ளப்படுகிறது.

மக்களின் வாழ்நிலை மாற்றம், வெப்பமயமாதல், சுகாதார சீர்கேடு காரணமாக ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பண்டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இதன் காரணமாக பருவநிலை மாறுகிறது. எதிர்பாராத நேரத்தில் வறட்சி, வெள்ளப்பெருக்கு, புயல் போன்றவை ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து வானிலையை சீராக வைக்கவேண்டும் என்பதற்காகத்தான், உலக வானிலை அமைப்பு பாடுபடுகிறது.

நாமும் நம்மால் முடிந்தவரையிலும் புகை இல்லாத வாகனம், தண்ணீர் சேமிப்பு, மாசுபடுத்தாத வாழ்க்கையை மேற்கொள்வோம்.

Leave a Comment