சென்னையை மாற்றிய 207 திட்டங்கள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 469

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மேயர் சைதை துரைசாமியின் காலத்தைப் பொற்காலம் என்றே சொல்ல முடியும். எந்த ஒரு மேயரும் இத்தனை திட்டங்கள் கொண்டுவந்தது இல்லை என்பது போன்று 207 திட்டங்கள் கொடுத்து சாதனை படைத்தார் மேயர் சைதை துரைசாமி. அடுத்த 50 சாதனைத் திட்டங்கள் இங்கே…

101. பிளாக் வரைபடங்கள் கணினி மையமாக்கப்பட்டு இருக்கின்றன.    

102. சாலையின் வலிமையை புதிய தொழில்நுட்பமான பி.பி.டி. முறையில்  கண்டறிந்து, சாலை அமைக்கப்படுகின்றன.   

103. சாலைப் பணிகளில்   ஒவ்வொரு நிலையிலும்  புகைப்படங்கள் எடுக்கப்பட்டு  பணப்பட்டுவாடா  செய்யப்படுகிறது.

104. மாநகராட்சியின் வரவு செலவு கணக்குகள் வெளிப்படையாக தெரிந்துகொள்ளும் வகையில் புதிய வழிமுறைகள்.

105. கடந்த 2011-2012 முதல் 2014-2015 வரை கணக்குகள் அனைத்தும் தணிக்கைக்கு உட்பட்டு செயல்பட்டது மாநகராட்சி வரலாற்றில் புதுமை.     

106. ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் முறை.   107. முதன் முறையாக தொழில்முறை பட்டய கணக்காளர்களைக் கொண்டு  சென்னை மாநகராட்சியின் கணக்குகள் தணிக்கைச்  செய்யப்படுகின்றன.     

108. மாதந்தோறும் தணிக்கைத்தடை நீக்குவதற்கு கூட்டமர்வுகள்.

109. மாநகராட்சி வணிகவளாக வாடகைதாரர்கள் வாடகை மற்றும் நிலுவைத் தொகையினை இ-சேவை மையத்தில் செலுத்தும் வசதி.

110    சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிழற்குடை, தெரு மின்விளக்கு கம்பங்கள், பொதுக் கழிப்பிடங்கள், பூங்காக்கள், மற்றும் விளையாட்டு அரங்கங்களில் விளம்பரப் பலகைகள் அமைத்து மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க புதிய முறையில் நடவடிக்கை.

111. வாகன நிறுத்தும் இடங்கள் நவீன மேலாண்மை முறையில் செயல் -படுத்தப்படுவதால் மாநகராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்க நடவடிக்கை.

112. உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் அனைத்து நீதிமன்றங்களின் வழக்குகளின் அனைத்து விவரங்களும் கணினியில் பதிவேற்றம்.      

113. பதில் மனு தாக்கல் செய்வதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கணினி வசதி.  

114. சென்னை மாநகராட்சி வழக்கறிஞர்கள் சரியாக வழக்கை நடத்துகிறார்களா என்பதையும், எக்ஸ் பார்ட்டி ஆகாமல் இருக்கவும் உடனுக்குடன் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவரவும், மூத்த சட்ட அலுவலர் நியமனம்.

115. பெருநகர சென்னை மாநகராட்சியின் வழக்குகளை கவனிப்பதற்கு வசதியாக மூன்று வட்டார அலுவலகங்களிலும்  உதவி சட்ட அலுவலர்கள் நியமனம்.  

116. தடையாணை பெற்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட்டுத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

117. வாரந்தோறும், வட்டார துணை ஆணையர் கலந்தாய்வு செய்து நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து  மேல்நடவடிக்கை  மேற்கொள்ள மேயர் உத்தரவு.

118. மாநகராட்சியின் உயர் அதிகாரிகளை ஒரு குழுவாக அமைத்து, துப்புரவுப் பணியினை கண்காணிக்க நடவடிக்கை.     

119. சமையலறை கழிவுகளைக்கொண்டு எரிவாயு தயாரிக்கும் பசுமைக் குடில் கலன்கள் அமைக்கும் பணி செய்ய திட்டமிடப்பட்டு 9 கலன்கள், அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. 8 இடங்களில் பணி நடைபெற்று வருகின்றன.   

120. குப்பையிலிருந்து  பிளாஸ்டிக்  கழிவுகள் பிரித்தெடுத்து சிறு சிறு துகள்களாக வெட்டி, சாலைப் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.   

122. கணினி மூலம் மின் ஒப்பந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

123. சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டு அலுவலகங்களிலும் 27 விதமான பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

124    மழைநீர் தேங்காமல் இருக்க, மழைநீர்வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே பிப்ரவரி மாதத்திலியே தொடங்க நடவடிக்கை.  

125. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில்  முதன் முறையாக மாநகராட்சி  நிதியில் பல அடுக்கு கார் நிறுத்தம் கட்டும் பணி.

126. மண்டலம்-9 சிவஞானம் தெருவில் பல அடுக்கு வாகன நிறுத்தம்.   

127. முதன் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பகலின் ஒளியை இரவிலும் வழங்கும் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

128. சைதாப்பேட்டை  மாந்தோப்பு மாநகராட்சிப் பள்ளி அருகில் விலைமதிப்புமிக்க நிலத்தை ஒரு ரூபாய் கூட மாநகராட்சிக்கு செலவு இல்லாமல் டி.டி.ஆர். திட்டத்தின் மூலம் மாநகராட்சி வசம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

129. சைதாப்பேட்டையில் 16 தளங்கள் கொண்ட அம்மா அலுவலகக்  கட்டிடம் கட்ட நடவடிக்கை.   

130. சைதாப்பேட்டை  மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நவீன  உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

131. பள்ளிக்கரணையில்  அம்மா கன்வென்ஷனல்  சென்டர்.      

132. மாநகராட்சி கட்டிடக் கூரைகளின் மீது சூரிய சக்தி தகடுகள் கொண்ட சோலார் மின்உற்பத்திச் சாதனங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

133. கோட்டூர்புரத்தில் மொத்த மீன் விற்பனை  அங்காடி கட்டும் பணி.     

134. மேம்பாலங்களுக்கு துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன  கைபிடிச் சுவர்கள். . 

135. மேம்பாலங்களில் ஸ்டிரிப் ஸ்டீல் விரிவாக்க இணைப்புகள். .   

136. மேம்பாலங்களுக்கு எபாக்சி வர்ணப் பூச்சு செய்யப்பட்டுள்ளது.

137. மாடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி இடத்தில் மூலிகை பண்ணை.  

138. மழைநீர்  வடிகால்வாய்களில் 5,402 இடங்களில் மழைநீர் உள்வடிவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் திடக்கழிவுகள் தடுக்கப்படுகின்றது.    

139. மழைநீர்  வடிகால்வாய்களில் 4,015 இடங்களில் மழைநீர் கேசரிப்பு அமைக்கப்பட்டுளதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பாதுகாக்கப்படுகிறது.    

140    மழைநீர் வடிகால்வாய் பணி விரைவில் நிறைவடைய கான்கிரீட் கட்டுமான பணிக்கு பதிலாக புதிய வழியில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பு.  

141. கணேசபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் தடுக்க, நீர்மூழ்கி  மோட்டர் மூலம் தண்ணீரை ஓட்டேரி நல்லாவில் விடுவதற்கு ஏற்பாடு.  

142. ஹாரிங்டன் சாலை நவீன முறையில் முன்மாதிரி கான்கிரீட் சாலையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

143. பூங்காக்களில் மூலிகைச் செடிகள்.

144. மக்கும் குப்பையிலிருந்து எரிவாயு தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

145. கேப்டன் காட்டன் கால்வாயில் சூழ்புனல்கரை அம்பேத்கர் சாலையில் நடைபாதை பாலத்திற்குப் பதிலாக வாகனப் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.

146. தெருவிளக்குகளில் சீரான வெளிச்சம் தரும் வகையில்  மின்சுருள் அமைப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளன.

147. மின்சேமிப்பிற்கு தானியங்கி விசைப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.   

148. மாம்பலம் ரயில் நிலையத்தையும் தியாகராயநகர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கப்படவுள்ளது.   

149. பாரிமுனை பகுதியில் பாதசாரிகளுக்காக தானியங்கி நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) வசதியுடன் கூடிய ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.  

150. மெரினா கடற்கரையில் உள்ள ‘லூப்’ சாலையை நவீன முறையில் கான்கிரீட் சாலை மற்றும் கான்கிரீட் சுற்றுச் சுவர் கட்டி, வளர்ந்த பனை மரங்கள் மற்றும் சிமெண்ட்டால் அமர்வு இருக்கைகளுடன் மேம்படுத்தும் பணி நடக்கிறது.  

– நாளை பார்க்கலாம்.

Leave a Comment