சென்னைக்குக் கொண்டுவந்த 207 திட்டங்கள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 468

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எந்த ஒரு மேயரும் இத்தனை திட்டங்கள் கொண்டுவந்தது இல்லை என்பது போன்று 207 திட்டங்கள் கொடுத்து சாதனை படைத்தார் மேயர் சைதை துரைசாமி. அடுத்த 50 சாதனைத் திட்டங்கள் இங்கே…

51. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படும் சோனோ மேமோகிராம் கருவிகள் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளன.     

52. இரண்டு பேறு கால மையங்களில் சுகாதார மேலாண்மைத் திட்டம்.  

53. துப்புரவு பணியாளர்களை தொற்றுக் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்கு,  மூக்கு, வாய் மற்றும் கைக் கவசங்கள்.    

54. துப்புரவு பணிளயாளர்களுக்கு ஒளிரும் மேலாடைகள். 

55. அனைத்து தெருக்களுக்கும், கால்நடை மருத்துவக் குழுக்கள் நேரில் சென்று வெறிநாய்களைக் கண்டறிந்து, வெறி நாய் கடிக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

56. நாய்கள் காப்பகம் அமைத்து பராமரிக்கப்படுகின்றது.   

57. பொதுமக்களின் செல்லப் பிராணிகளை அடக்கம் செய்ய தனி மயான பூமி. 

58. தெரு நாய்களுக்கு மாநகராட்சி மூலம் கண்ணம்மாபேட்டை மற்றும் லாயிட்ஸ் சாலை மையங்களில் கருத்தடை அறுவைச்சிகிச்சை மையங்கள்.  

59. எட்டு 24 மணி நேர மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் நானோ சர்பேஸ் டெக்னாலஜி ஏற்படுத்தப்பட்டுள்ளது.   

60. இதயத் துடிப்பை சீர்செய்யும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.   

61. பேறுகால மையங்களில் நெபுலைசர் கருவிகள்.

62. ஊனக் குறைபாடுகளை கண்டறிய சிறப்பு ஸ்கேன் செய்யும் திட்டம்.  

63. மருத்துவர்களை தொடர்புகொள்ள மருத்துவமனையில் வைஃபை வசதி.   

64. முதன்முறையாக மாநகராட்சியில் 11 பல் மருத்துவமனைகள் தொடக்கம்.

65. பேறுகால மையங்களில் கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகள்.  

66. மகப்பேறு மருத்துவமனைகளில் சூரியஒளி மூலம் மின்சாரம் பெற நடவடிக்கை.   

67. தோட்டங்களுடன் கூடிய வீடுகளுக்கு இலவச தென்னைமரக்கன்றுகள்.

68. மூலிகை செடிகள் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்குதல்.  

69. ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன மூலிகை உணவகம்.  

70. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளின் கரையோரங்களிலும், கால்வாய்களின் ஓரங்களிலும் வளர்ந்த பனை மரங்கள் நடவு செய்ய நடவடிக்கை.  71. ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி.  

72. கடற்கரையில் முதன் முறையாக வளர்ந்த மரங்கள் நடப்பட்டுள்ளன.

73. மனை அளவு 860 சதுர அடிக்கு கீழ் என்றாலும் வரைபட அனுமதி வழங்கி, முறையற்ற கட்டிடங்கள் கட்டுவது தடுக்கப்பட்டது.

74. கொசுப் பெருக்கத்தைத் தடுக்க வீடுகள் தோறும் நொச்சி மூலிகைச் செடிகள்.

75. கர்ப்பிணி பெண்களுக்கு சுகப் பிரசவம் அடைவதற்கு யோகாசனப் பயிற்சி.  

76. நகர்ப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு ஸ்வர்ண ஜெயந்தி வேலை வாய்ப்புத் திட்டம்,  

77. பொது மக்களால் சமர்ப்பிக்கும் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இலவசமாக பெறும் வகையில் அரசின் பதிவு பெற்ற வழக்குறைஞர் நியமனம்.

78.. விரிவாக்கப் பகுதிகளில் சொத்துவரி பெயர் மாற்றக் கட்டணம் ரத்து.  

79. பிறந்த தேதியுடன், பிறந்த நேரமும் குறிப்பிட்டு பிறப்புச் சான்றிதழ்கள்.     

80. தமிழ் மற்றும் ஆங்கிலம் –  இரு மொழிகளிலும் பிறப்பு இறப்பு சான்றிதழ் முதன் முறையாக வழங்கப்படுகின்றன.

81. மேல்நிலை அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட வயர்லஸ் கருவிகள் தற்போது களப்பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

82. வாக் இன் பேமென்டட் முறையில் வங்கிகளில் சொத்துவரி செலுத்தும் வசதி.  83. ஒற்றைச் சாரள முறையில் தொழில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.    

84. சாலைப் பணிகளை தொடக்கம் முதல் முடியும் வரை கண்காணிக்க திட்ட மேலாண்மை கலந்தாளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

85. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு முதன் முறையாக முக்கியமான 24 சாலைகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

86. பாவ்மென்ட் குவாலிட்டி இன்டிகேட்டர் கருவி மூலம் சாலைகளில் தரப் பரிசோதனை.      

87. முதல்வர் ஜெயலலிதா சிறப்புத் திட்டத்தின் கீழ் வழங்கிய ரூ.1,488 கோடி நிதி.  

88.  அரசு நிறுவனத்தின் மூலம் மின்ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கழிவுப்பொருட்கள் நிதி இழப்பின்றி சரியான விலைக்கு ஏலம் விடப்படுகின்றன.   

89. நடைபாதைக்கு இடையூறான  பெட்டகங்கள், மின் மாற்றிகள் இடமாற்றம்.  

90.  கட்டிட வரைபட அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி.

91. பசுமை வழி முறையில் (கிரீன் சானல்) விரைவான கட்டிட அனுமதி.

92. சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் வரைபட சென்னை மாநகராட்சி இணைய தளத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் பதிவேற்றம். .   

93. கட்டிடப் பணி நடைபெறும் கட்டிடத்தை ஒட்டியுள்ள உரிமையாளர்களுக்கு வரைபட நகல் முதன் முறையாக வழங்கப்படுகிறது.

94. கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் நடந்த முறைகேட்டைத் தடுக்க அந்த வளாகங்களில் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவிகள்.

95. சீரிய துப்புரவு பணிக்கு பூகோள தொழில் நுட்ப முறை அறிமுகம்.  

96. பகுதி நேர துப்புரவுப் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் விருப்பமுள்ள பொதுமக்கள் முதன் முறையாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  

97. சேவை இணைப்புக்கு சாலை வெட்டும் பணிக்கு இணையதளம் மூலம் அனுமதி.

98. திறந்த வெளி ஒதுக்கீட்டு நிலங்களின் விவரங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம்.      

99. கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் சொத்து வரி செலுத்தும் புதிய வசதி.  

100. சொத்துவரி வசூலிப்பதற்கு ஏதுவாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   

Leave a Comment