மறுஜென்மம் இருப்பது உண்மையா..?

ஞானகுரு பதில்

இந்த பூமியில் எதுவுமே அழிவதில்லை. ஒன்று வேறொன்றாக மாறுகிறது, அவ்வளவுதான்.

அதாவது, விதையின் மரணம் மரமாகிறது. மேகத்தின் மரணம் மழையாகிறது. காலகாலமாக இதுபோன்ற சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது. அதனால், பிரபஞ்சத்தில் உருவான எதுவும் முற்றிலும் அழிவதில்லை.  

அழிவு என்பது மற்றொன்றின் தொடக்கமாக இருக்கிறது என்பது தான் அறிவியல். முன் ஜென்மம், மறு ஜென்மம் என்பதெல்லாம் மனிதரை மனிதர் அடிமையாக்குவதற்கு உருவாக்கப்பட்ட கட்டுக் கதைகள்.

முன் ஜென்மம் அறிந்தவர் யாரும் இல்லை. மறு ஜென்மம் இருந்தாலும் யாரும் அதை அறியமுடியாது. அதனால் இந்த ஜென்மத்தை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தாலே போதும்.

முன் ஜென்மன், மறு ஜென்மம் பற்றி எழுதிய எல்லோரும் சாதாரண மனிதர்கள் மட்டுமே. அதனால் இந்த ஜென்மத்தை மட்டும் இப்போது மதிப்போம்.  மறு ஜென்மத்தை பின்னர் பார்த்துக்கொள்வோம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment