ஆயிரம் ரூபாய் தர்மத்துக்கு 1000 கோடி ரூபாய் பலன்…?

ஞானகுரு பதில்

முதியவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதால் புண்ணியம் கிடைக்கும் என்பது பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய் இன்வெஸ்ட் செய்துவிட்டு 500 கோடி ரூபாய் கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் பேராசை இது.

கொடுப்பதும் கிடைப்பதும் எப்படி இருக்கவேண்டும் தெரியுமா..?

பாராட்டுவதற்காக ஓவியர்கள் படம் வரைவதில்லை. பரிசுக்காக கவிஞர்கள் எழுதுவதில்லை. தங்கள் படைப்பில் திருப்தி கிடைப்பதாலே வரைகிறார்கள், எழுதுகிறார்கள். அதேபோல், பிறருக்குக் கொடுப்பதில் திருப்தியும் சந்தோஷமும் அடைபவர்கள் மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று இதையே சொல்கிறார்கள்.

கொடுப்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது, கிடைப்பதில் அல்ல. எனவே உதவி செய்வதால் புண்ணியம், சொர்க்கம் கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போக வேண்டாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment