மந்திரச்சொல் மகிமை
ஒவ்வொரு சொல்லும் எழுத்துக்களால் ஆனதல்ல, உணர்வுகளால் ஆனவை. வீரியமான பேச்சு மூலம் ஒரு கூட்டத்தை வன்முறைக்குத் தூண்டலாம் அல்லது அமைதிப்படுத்தலாம். மக்களைப் பிரிக்கலாம் அல்லது ஒன்றிணைக்கலாம்.
கல்வி அளிக்கலாம் அல்லது சூழ்ச்சி செய்யலாம்.
சரியான முறையில் பயன்படுத்தப்படும் சொற்கள் நேரடியாகப் பயனளிக்கின்றன. எனவே, ஒவ்வொரு சொல்லையும் மனசுக்குள் சொல்லிப் பார்த்தபிறகே வெளியே பேச வேண்டும். .
இன்றைய காலத்தில், ஒரு ட்வீட் அல்லது வைரலாகும் ஹேஷ்டேக் கூட சமூக இயக்கங்களைத் தூண்டும். “Me Too”, “Black Lives Matter” போன்றவை வெறும் சொற்கள்தான். ஆனால் அவை இந்த உலகத்தையே உலுக்கின. ஒவ்வொரு நபருக்கும் ஒரு அர்த்தம் கொடுத்தஹு.
நல்ல சொற்கள் மூளையின் மகிழ்ச்சி மையங்களைத் தூண்டி மனஅழுத்தத்தை குறைக்கின்றன. தீய சொற்கள் தொடர்ந்து கேட்கப்படும் போது பதட்டத்தையும் பயத்தையும் அதிகரிக்கின்றன.
ஒரே ஒரு எதிர்மறை சொல் கூட அழுத்த ஹார்மோன்களை அதிகரித்து சிந்தனைத் திறனை குறைக்கலாம். அதேநேரம் நம்பிக்கை தரும் சொற்கள் ஆறுதலும் தெளிவும் கொடுக்கலாம்.
நல்ல சொற்களைப் பயன்படுத்துங்கள் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, உணர்வு, சிந்தனை, யதார்த்தத்தைத் தூண்டி மகிழ்ச்சி தரக்கூடியது. எனவே, வெறுமனே பேசுவதற்காக எதையும் பேச வேண்டாம். மிகுந்த கவனத்துடன், புதிய சக்தியுடன், நல்ல நோக்கத்துடன் சொற்களைப் பயன்படுத்துவதே நல்லது.
ஒரு சொல் கேட்டவுடன் உடைந்து அழக்கூடும்…
ஒரு வரி கேட்டவுடன் உயிர் பிழைக்கவும் முடியும்.
நரம்பியல் ஆய்வுகள் சொல்வது என்ன தெரியுமா?
உன்னால் முடியாது, நடக்காது, தோல்வி கிடைக்கும் என்பது போன்ற சொற்கள் தொடர்ந்து கேட்டால் மூளையில் பயம், அழுத்தம் உருவாகும். அதேநேரம், முயற்சி வெற்றி தரும், உன்னால் முடியும் என்பது போன்ற வார்த்தைகள் தைரியமும் நம்பிக்கையும் தரும்.
ஒரு தந்தையின் கடுமையான சொல், ஒரு குழந்தையின் வாழ்க்கையையே உடைக்கலாம். ஒரு ஆசிரியரின் ஊக்கமூட்டும் சொல் ஒரு சாதாரண மாணவனை சாதனையாளனாக்கலாம்.
எனவே, நல்ல வார்த்தைகளைப் பேசுங்கள், நல்ல வார்த்தைகளைக் கேளுங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறுவதைக் காண முடியும்.

