பணமே மந்திரம்
சிலர் கையில் எப்போதுமே பணம் இருக்கும். சிலர் கைக்கு வந்த கொஞ்ச நேரத்திலே பணம் காணாமல் போய்விடும். ஏன் தெரியுமா..? பணத்துக்கு அந்த மனிதரைப் பிடிக்கவில்லை என்பது தான் அர்த்தம். எப்படிப்பட்ட குணம் உள்ளவர் கையில் பணம் நிற்காது என்பதைப் பார்க்கலாம்.
- பணம் முக்கியமில்லை என்று தத்துவம் பேசும் நபர்களை பணத்துக்குப் பிடிக்கவே பிடிக்காது.
- கடன் வாங்கி ஆடம்பரச்செலவு செய்பவர்களை பணத்துக்குக் கொஞ்சமும் பிடிக்காது.
- செலவு செய்வதை கட்டுப்படுத்தும் வலிமை இல்லாதவர்களை பணத்துக்குப் பிடிக்காது.
- தனக்காக வாழாமல், அடுத்தவர் போன்று வாழ்வதற்கு ஆசைப்பட்டு செலவழிக்கும் நபர்களை பணத்துக்குப் பிடிக்காது.
- அதிக வட்டி, மும்மடங்கு பணம் என்று பேராசையில் முதலீடு செய்யும் மனிதர்களை பணத்துக்குப் பிடிக்காது.
- செய்த செலவுகளுக்கு கணக்கு பார்க்காத நபர்களை பணத்துக்குப் பிடிக்காது.
- பொருளின் விலை பார்க்காமல் வாங்கும் நபர்களைப் பிடிக்காது.
- பணம் என்னவெல்லாம் சாதிக்கும் என்பதை புரிந்துகொள்ளாத நபர்களிடம் பணம் தங்காது.
ஆகவே, இந்த குணங்களை மாற்றிக்கொள்ளுங்கள். பணம் உங்களைத் தேடி வந்துவிடும்.
