உடல் எனும் ஆனந்தம்
வயிறு பசிப்பது போன்று உடலும் இன்பத்திற்கு அலைவது இயற்கை. காமம் என்பதும் உடலின் ஒரு தேவை. எனவே காம உணர்வை அவமானமாக அல்லது குற்றமாகக் கருத வேண்டியதில்லை. காமத்தை அடக்க நினைப்பது தான் தலைவலியாக, கோபமாக, வெறுப்பாக மாறுகிறது. ஒரு சிலர் காம வெறிக்கு ஆளாகி பாலியல் குற்றங்களும் செய்கிறார்கள். எனவே, காமத்தை புரிந்துகொண்டு அதனை அனுபவிக்க வேண்டும் அல்லது அகற்றிவிட வேண்டும்.
- காமத்தை ஆணும் பெண்ணும் சுயமாகவே தணித்துக்கொள்ள முடியும். எனவே, அதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
- வேலை இல்லாதவருக்கே இந்த சிந்தனை அதிகம் வரும். எனவே, மனதையும் உடலையும் பிஸியாக வைத்துக்கொண்டால் இந்த எண்ணங்களில் இருந்து விடுபட முடியும்.
- ஆபாச தளங்கள், தனிமை, தவறான நண்பர்களிடமிருந்து விலகியே நில்லுங்கள்.
- உடல் பசி அதிகரிக்கும் நேரத்தில் நோயாளிகள், முதியவர்கள், உழைப்பாளிகளின் கடின வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள், காமம் அத்தனை முக்கியமானது இல்லை என்பது புரியவரும்.
- சில நொடிகள் இன்பத்துக்காக வாழ்க்கையைப் பணயம் வைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டால் காமத்தை சாதாரண உணர்வாகக் கடந்துவிட முடியும்.
காமம் என்பது புனிதமானதும் அல்ல மோசமானதும் அல்ல என்பதை புரிந்துகொள்வதே உண்மையான மகிழ்ச்சி.
