சக்சஸ் ஃபார்முலா
ஒரு பிரச்னை வரும்போது சாதாரண மனிதர்கள் அதை ஆபத்தாகப் பார்க்கிறார்கள். வெற்றியாளர்கள் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். அதனாலே வெற்றி பெறுகிறார்கள். எந்த வெற்றியும் சுலபமாகக் கிடைக்காது. எனவே, வெற்றி வேண்டுமென்றால்
அவர் 5 தியாகங்கள் செய்ய வேண்டும்.
- சொகுசான வாழ்க்கையை விட்டுக்கொடுத்து கடுமையான பணிச்சூழல் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
- நிறைய தூக்கத்தை, நிம்மதியை இழக்க வேண்டியிருக்கும்.
- பணம் இழக்கும் சூழ்நிலை வரலாம்.
- பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்கவே முடியாமல் போய்விடும்.
- குடும்பத்தை விட வெற்றிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கும்.
இத்தனை தியாகங்கள் செய்த பிறகே வெற்றி தேடி வரும். ஆகவே, இந்த தியாகங்கள் செய்வதற்குத் தயாராகுங்கள். வெற்றி தேடிவரும்.
