பேய் பற்றி 5 அதிசய உண்மைகள்

படித்தாலே சிரிப்பீர்கள்

எல்லா நாட்டினருக்கும் பேய் பற்றிய நம்பிக்கை இருக்கிறது. செத்துப்போனவர்கள் பேயாக வந்து தீமை செய்வதாக நம்புகிறார்கள். அதேநேரம், அறிவியல் பேய் என்பதை இதுவரை ஏற்கவில்லை. யாரும் பேயை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவும் இல்லை.

  1. அறிவியல் பார்வையில் பேய் என்பது பயத்தின் பிரதிபலிப்பு. அச்சப்படுபவர்களுக்கு மட்டுமே பேய் நம்பிக்கை இருக்கிறது.
  2. பேய் என்றாலே பெண் பேயாகவே பார்க்கப்படுகிறது. ஆண் பேய் பற்றி யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை.
  3. பேய்க்கு கால் இல்லை என்பார்கள். அதேநேரம், பேய் நடக்கும்போது கொலுசு சத்தம் கேட்பதாகவும் சொல்கிறார்கள்.
  4. பூனை, நாய் போன்ற மிருகங்களின் கண்களுக்குப் பேய் தெரியும் என்று சொல்லப்படுவது இதுவரை நிரூபணமாகவில்லை.
  5. இறந்தவர்களுக்கு சடங்கு முடியும் 1 மாதம் வரையிலும் பூமியில் பேயாகத் திரிவார்கள் என்பதை பலரும் நம்புகிறார்கள். 

மனிதரின். பயம், அச்சத்துக்கு உண்மையான காரணத்தை கண்டுபிடித்துவிட்டால் பேய்க்கு அவசியம் இல்லை என்கிறது மனோ தத்துவம். உண்மையைக் கண்டறிந்து மகிச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment