என்ன செய்தார் சைதை துரைசாமி – 467
பெருநகர சென்னை மேயராக பதவியேற்ற காலத்தில் இருந்து மேயர் சைதை துரைசாமி தினமும் 19 மணி நேரம் உழைத்து ஏகப்பட்ட புதிய திட்டங்களை நிறைவேற்றி மாபெரும் சாதனை படைத்தார்.
சென்னை மாநகராட்சியில் மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட 207 புதிய திட்டங்கள் காலம் முழுவதும் அவர் புகழை சொல்லிக்கொண்டே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது சாதனைத் திட்டங்களை இங்கு பட்டியலிடுகிறேன்.
1. மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் மிகக்குறைந்த விலையில் மூன்று வேளையும், சுகாதாரமான சுவையான உணவளிக்கும் அம்மா உணவகம்.
2. ஆதரவற்ற மக்களுக்காக அம்மா இலவசக் காப்பகம்.
3. ஏழை மக்களும் சுகாதார குடிநீர் பருகும் வகையில் 20 லிட்டர் விலையில்லா அம்மா குடிநீர்.
4. உபயோகிப்பாளரும், உற்பத்தியாளரும் பயன்பெறும் வகையில் காய்கறி, தானிய வகைகளை அரசின் 25 துறைகள் மூலம் பொது மக்களுக்கு நேரில் விநியோகிக்கும் அம்மா வாரச்சந்தை (விரைவில் பயன்பாட்டிற்கு வரும்).
5. கொசுக்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க விலையில்லா கொசு வலைகள்.
6. குறைந்த செலவில் பொழுது போக்கு வசதி அளிக்கும் அம்மா திரையரங்கம். (விரைவில் பயன்பாட்டுக்கு வரும்)
7. ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் தங்கி பயில அம்மா உண்டு உறைவிடப்பள்ளிகள்
8. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. போன்ற அரசு போட்டித் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி.
9. பள்ளிகளுக்கு 100 விழுக்காடு வருகை புரியும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு.
10. பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்களுக்கு மாலை நேரங்களில், புரதச்சத்துகளுடன் கூடிய பலவகையான சுண்டல் பயிறுகள்.
11. தகப்பனார் இல்லாத மாணவர்களின் தாயார் பெயரில் ரூ.50,000 வங்கி கணக்கில் வைப்புத்தொகை.
12. பள்ளி மாணவர்களுக்கு பப்பாளி மரக்கன்றுகள்.
13. மாணவர்களுக்கு யோகாசனப் பயிற்சி.
14. மாணவர்களுக்கு கிடைக்கும் நலத்திட்டங்களை/சலுகைகளை விளக்கும் அறிவிப்பு பலகைகள்.
15. மாணவச் செல்வங்களின் பொது அறிவை விரிவாக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்.
16. எட்டு பள்ளிகளில் முதன் முறையாக 9 அறிவியல் ஆய்வகங்கள்.
17. மாணவ மாணவியருக்கு விலையில்லா விடைத்தாள்கள்.
18. மாணவ மாணவியருக்கு விலையில்லா வினாத்தாள்கள்.
19. மேல்நிலை வகுப்பு வேதியியல் பிரிவு மாணவ, மாணவியருக்கு வெள்ளை நிற ஆய்வக மேல்சட்டை மற்றும் கண் பாதுகாப்பு கண்ணாடி.
20. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மாணவ மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள்.
21. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எல்.சி.டி. புரொஜெக்டர்கள்.
22. உயர்நிலைப்பள்ளிகளில் கணித ஆய்வகங்கள்.
23. வளவகுப்பறை எனப்படும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டன.
24. மாணவ மாணவியருக்கு விலையில்லா செய்முறை பயிற்சி ஏடுகள்.
25. போட்டித் தேர்வுகளுக்கு விளக்க கையேடுகள்.
26. பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமனம்.
27. புதிதாக 170 மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டு மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது.
28. மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உயர்வு.
29. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நகல் எடுக்கும் இயந்திரங்கள்.
30. பள்ளிகளின் மாணவர்கள் விவரங்களுடன் கூடிய நாட்குறிப்பேடு.
31. பள்ளி காலாண்டுத் தேர்வு முடிந்ததும் மேயருடன் பெற்றோர் சந்திப்பு.
32. இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை எளிதில் கற்பதற்கு தமிழ் மற்றும் ஆங்கில குறுந்தகடுகள்.
33. மேல்நிலைப்பள்ளி மாணவர் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளில் கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள்.
34. மாணவர்களுக்கு இசை பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்தி பரிசுகள்.
35. வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி சிகிச்சை பெற இலவச தங்கும் விடுதிகள்.
36. தொழுநோய் சிகிச்சை மையத்துடன் மாடம்பாக்கம் மருத்துவமனை.
37. ரத்தப் பகுப்பாய்வு கூடங்களில் இலவச மருத்துவப் பரிசோதனைகள்.
38. அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், குடிசைப்பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அணுகாமல் காப்பதற்கு நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு இலைச்சாறு இலவசமாக அளிக்கப்படுகிறது.
39. இயற்கையோடு நலவாழ்வு காண இயற்கை மருத்துவ சேவை.
40. பதினெட்டு ல்ட்சம் பயனாளிகள் பலன்பெறும் வகையில் 12,000 மருத்துவ முகாம்கள்.
41. காச நோயாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.10,000 உதவித் தொகை.
42. பூங்காக்களில் கூழாங்கற்களினாலான அக்குபிரஷர் நடைபாதைகள்.
43. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி.
44. திருமண நிதி உதவி பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்க இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
45. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் தொகை ரூ.12,000 வழங்கப்படுகிறது.
46. பிறந்த 5 – 6 மாதத்திற்குள் உள்ள குழந்தைகளின் கேட்கும் திறன் குறைபாடுகளைக் கண்டறிய சிறப்புக் கருவிகள்.
47. தீவிர சிசு கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
48. அனைத்து 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளிலும் தீயணைப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
49. அனைத்து 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு படப்பதிவுக் கருவி. .
50. மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் செல்வதற்கு ஏதுவாக ஐ.ஆர்.சி. வழிகாட்டுதலின்படி மேம்பட்ட நடைபாதைகள்.
– நாளை பார்க்கலாம்.
