அரசியல் ஆச்சர்யம்
புதிதாக கட்சி ஆரம்பிப்பதும், தேர்தலை சந்திப்பதும் சாதாரண விஷயம் இல்லை. அதுவும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் விட்டுக்கொடுக்காமல் போராடுவதற்கு தனித்திறமை வேண்டும். அந்த வகையில் விஜய் மகத்தான சாதனை வெற்றி படைத்திருக்கிறார்.
அதேநேரம், தேர்தல் பற்றி மக்களிடம் இருந்த 10 மாயைகளை விஜய் உடைத்திருக்கிறார்.
1. பணம் கொடுத்தால் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற அயோக்கியத்தனத்திற்கு முடிவு கட்டியிருக்கிறார்.
2. பூத் ஏஜெண்ட் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணி என்பதை உணர்த்தியிருக்கிறார்.
3. கூட்டணி பலம் இருந்தால் ஜெயிக்கலாம் என்ற தேர்தல் கணக்கை உடைத்திருக்கிறார்.
4. வேட்பாளர் தேர்வு மிகவும் முக்கியம் என்ற மாயையை உடைத்திருக்கிறார்.
5. ஜாதி, மதம் பார்த்தே தொகுதியில் வேட்பாளர் நிறுத்தவேண்டும் என்பதை உடைத்திருக்கிறார்.
6. தலைவர் எல்லா தொகுதிக்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்பதை உடைத்திருக்கிறார்.
7. கருத்துக்கணிப்புகள் எல்லாமே பொய் என்று நிரூபித்திருக்கிறார்.
8. சென்னை திமுக கோட்டை, கொங்கு அதிமுக கோட்டை என்ற பில்டப்களை உடைத்திருக்கிறார்.
9. தமிழகத்தை திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆள முடியும் என்ற நம்பிக்கையை உடைத்திருக்கிறார்.
10. பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், போராட்டம் தேவையில்லை, இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களே போதும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
மாற்றம் என்பது மட்டுமே மாறாத தத்துவம் என்பதை கண் முன்னே நிகழ்த்திக் காட்டியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். நல்லவை நடக்கட்டும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்
