நாக்கு மருத்துவம்
உடல் நலக்குறை காரணமாக மருத்துவரை சந்திக்கும்போது, நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்ப்பதுண்டு. இது எதற்காக என்றால் நாக்கின் நிறம் இயற்கையாக இருக்கிறதா அல்லது மாற்றம் அடைந்திருக்கிறதா என்பதை அறிவதற்குத்தான். ஒவ்வொரு மாற்றமும் எதை குறிக்கிறது என்பதை பார்க்கலாம்.
நாக்கின் இயல்பான நிறம் என்பது பிங்க் நிறத்துடன் லேசாக வெள்ளை கோட்டிங்குடன் இருக்க வேண்டும். எனவே நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம்.
சிவப்பு நாக்கு :
தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் நிறம். வைட்டமின் பி பற்றாக்குறை இருந்தாலும் சிவப்பாக இருக்கும்.
மஞ்சள் நாக்கு :
மஞ்சள் காமாலை அறிகுறியாக கருதப்படுகிறது. மேலும், வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இளம் சிவப்பு :
இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதைக் குறிக்கிறது.

வெள்ளை நாக்கு :
உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.
கருப்பு நிற நாக்கு :
புகை பிடிப்பதன் அறிகுறி, மருந்து அலர்ஜி, ஹெச்.ஐ.வி. நோய் அறிகுறி. சுவாச பிரச்னை மற்றும் நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது.
சிமெண்ட நிற நாக்கு :
செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதைக் குறிக்கிறது.
நீலம் நிற நாக்கு :
சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதைக் குறிக்கிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதையும் குறிக்கிறது.
பச்சை நிற நாக்கு :
பாக்டீரியா வளர்ச்சி, சுகாதாரக் குறைபாடு.