ஞானகுரு தரிசனம்
இந்த உலகத்திலேயே நம்மை விட சிறந்த காதலர்கள் யாருமே இல்லை’ என்ற எண்ணத்தில்தான் அத்தனை பேரும் மெய் மறந்து காதலிக்கிறார்கள். எத்தனை சிக்கல்கள் வந்தாலும் தில்லாக எதிர்த்து நின்று போராடி, திருமணம் முடிக்கிறார்கள். அத்தனை தீவிரமாக இருந்த காதலர்கள்தான், சில வருடங்களில் நீதிமன்றப் படி ஏறி விவாகரத்து கேட்டு அடம் பிடிக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்கக் கூட பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்… சந்தேகப்படுகிறார்கள்… சில நேரங்களில் கொலையும் செய்கிறார்கள்.
திருமணத்தில் முடிந்த காதலில்தான் சிக்கல் என்றால் நிறைவேறாத காதலும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுடனே இருக்கிறது. ‘நான் உயிரையே வைத்திருந்தேன். என் காதலைப் புரிந்துகொள்ளவே இல்லை. என்னை ஏமாற்றிவிட்டார்’ என்று பரஸ்பரம் புகார் சொல்லித்தான் பிரிகிறார்கள். தோல்வி அடைந்த காதலை கெட்ட கனவாக எண்ணி மறக்கத்தான் துடிக்கிறார்கள்.
சரக்கு அடிக்காமலே சகல நேரமும் போதையில் மிதக்க வைத்த காதல், எப்படி திடீரென சகிக்கவே முடியாத உறவாக மாறுகிறது? உயிருக்கு உயிராக நினைக்க வைக்கும் காதல் எப்படி உயிரைப் பறிக்கும் தற்கொலைக்குக் காரணமாகிறது? காதல் காரணமாக குடும்பமே விஷம் குடிக்கிறது. ஒரு கிராமம் கலவரபூமியாக மாறுகிறது.
ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது? காலைத் தொட்டுத் தொட்டுச் செல்லும் அலைகளின் சந்தோஷத்தில் திளைத்து நிற்கும்போது, திடீரென அந்த அலைகளே சுனாமியாக மாறி விழுங்குவது போல் பலரது வாழ்க்கையையும் புரட்டிப் போடுவதுதான் காதலா?
இல்லை. காதல் சந்தோஷமானது. தோல்விகளுக்கும் சிக்கல்களுக்கும் காரணம், காதல் பற்றிய மூடநம்பிக்கைதான். குருடன் யானையைப் பார்தது போல் காதலைத் தவறாகப் பார்ப்பவர்களே அவதிப்படுகிறார்கள்.
காதல் என்பது ஒரு நல்ல ஆரம்பம் மட்டுமே. தம்பதியராக மாறிய பிறகே இருவருக்கும் உண்மையான நெருக்கமும் அன்பும் அதிகரிக்க வேண்டும். இதற்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும், விட்டுக்கொடுக்கவும், கீழே விழும் நேரத்தில் தாங்கிக்கொள்ளவும் வேண்டும்.
எல்லாவற்றையும் விட, நாம் காதலித்த நபர் சரியான நபர் என்றும் சரியான நபரையே திருமணம் முடித்திருக்கிறோம்.
