ஆண்கள் ஏன் இப்படி ஜொள்ளு விடுகிறார்கள்..?

ஞானகுரு பதில்

கேள்வி : டீன் ஏஜ் மாணவர்கள் தொடங்கி தாத்தா வரையில் பெண்களைப் பார்த்தாலே ஜொள்ளு விடுகிறார்களே… இவர்களை என்ன செய்வது?

  • எஸ்.பிரேமலதா, சென்னை.

ஞானகுரு :

இயற்கையால் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு படைக்கப்பட்ட உயிரினமே ஆண். அதனால் ஆணின்  சிந்தனை எப்போதும் அப்படித்தான் இருக்கும். உளவியல் ரீதியாக பெண் வித்தியாசமானவர்.   

18 வயதில் பெண்களுக்கு அழகான ஆண்களைப் பிடிக்கிறது. 25 வயதில் அறிவில் முதிர்ந்த ஆண்களைப் பிடிக்கிறது. 30 வயதில் வாழ்வில் வெற்றி பெறும் ஆண்களைப் பிடிக்கிறது. 40 வயதில் திறமைகளை நிலைநாட்டிய ஆண்களைப் பிடிக்கிறது. 50 வயதில் நேர்மையான ஆண்களைப் பிடிக்கிறது. 60 வயதில் உதவும் குணம் கொண்ட ஆண்களைப் பிடிக்கிறது.

உளவியல் ரீதியாக ஆண்கள் எப்படித் தெரியுமா..? 18 வயதில் அழகான பெண்களைப் பிடிக்கிறது. 25 வயதில் அழகான பெண்களை பிடிக்கிறது. 30 வயதில் அழகான பெண்களை பிடிக்கிறது. 40 வயதில் அழகான பெண்களை பிடிக்கிறது.

50 வயதில் அழகான பெண்களை பிடிக்கிறது. 60 வயதில் அழகான பெண்களை பிடிக்கிறது. நடக்க முடியாமல் தள்ளாடும் வயதிலும் அழகான பெண்களை பிடிக்கிறது. இது இயற்கையின் படைப்பு. எனவே, எல்லை மீறாத வரை ஆண்களின் ஜொள்ளுவை பெண்கள் கண்டுகொள்ளத் தேவை இல்லை. அலட்சியப்படுத்தினாலே போதும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment