குற்றவாளிகளும் நியாயம் பேசுவது ஏன்..?

ஞானகுரு பதில்

கேள்வி : ஊழல் செய்பவர்கள், கொலை செய்பவர்களும், தாங்கள் செய்வதை சரி என்று நினைக்கிறார்களே, அது எப்படி..? 

  • ஏ.தேவிப்பிரியா, சூலூர்.

ஞானகுரு :

ஒவ்வொரு மனிதரும், அவர் செய்யும் செயலுக்கு வழக்கறிஞராக இருந்து நியாயம் கற்பிக்கிறார்கள். தன்னுடைய தேவைக்கு எது செய்தாலும் அதை நியாயம் என்று நிரூபிக்க காரணம் உருவாக்கிக் கொள்கிறார்கள். எல்லோரும் லஞ்சம் வாங்கும்போது நாம மட்டும் வாங்கலைன்னா தப்பாயிடும், நெரிசல் இல்லாதப்ப ஒன் வே ரூட்ல போறது தப்பு இல்லை என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.

இந்த வகையில் தான் ஆணவக்கொலை செய்பவர்களும், கைது செய்யப்படும் ஊழல் குற்றவாளிகளும் சிறைக்குச் செல்லும்போது கொஞ்சமும் கலங்காமல் கையை ஆட்டிக்கொண்டே போகிறார்கள்.

அதேநேரம் மற்றவர்கள் தவறு செய்யும்போது, குற்றம் கண்டுபிடிக்கும் நீதிபதிகளாக மாறிவிடுகிறார்கள். என்ன அவசரம் என்றாலும் ரெட் லைட்டை மதிக்க வேண்டும் என்பார்கள். பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு தீமை வரும்போது, அவரை கடவுள் தண்டித்துவிட்டார் என்கிறார்கள். தனக்கு தீமை வரும்போது கடவுள் சோதிக்கிறார் என்கிறார்கள். இந்த சுயநலமே மனிதரின் நியாயம் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment