காதலர் தின ஸ்பெஷல்
காதலில் விழுந்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் மூளையில் டோபமைன் உற்சாகமாகப் பாய்வதாலே மகிழ்ச்சி நீடித்து நிலைக்கிறது. காதலிக்கும் ஆசை எல்லோருக்கும் உண்டு. அதேநேரம், காதல் செய்ய விரும்பும் பெண்களுக்கு 5 தகுதிகள் முக்கியத் தேவை.
- தன்னுடைய தேவைக்கு தானே சம்பாதித்துக்கொள்ளும் பொருளாதார சுதந்திரம் பெண்ணுக்கு இருக்க வேண்டும். காதலன் தன்னுடைய அத்தனை தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் ஆபத்தானது.
- வெளிப்படையாகப் பேசும் குணம் வேண்டும். தன்னுடைய கோபம், ஆத்திரம், அன்புக்குக் காரணத்தை காதலன் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பது பக்குவமில்லாத செயல்.
- ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். மாறவேண்டும் என்று கெஞ்சுவதும் மாற்ற முயற்சிப்பதும் காதலைக் கசப்பாக்கிவிடும்.
- அன்பைக் காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்யும் குணம் காதலுக்கு ஆகாது. சண்டையில் பழைய விஷயங்களைக் கொண்டுவருவதும் காதலை சிக்கலாகிவிடும்.
- காதல் இல்லாமலும் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கை பெண்ணுக்கு மிகவும் முக்கியம்.
அன்பு என்ற பெயரில் ஆணின் சுதந்திரம், நேரத்தை பெண்கள் ஆக்கிரமிக்கக்கூடாது. எனவே, ஆணை நேசிக்கத் தொடங்குவதற்கு முன்பு பெண் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தன் மீது நம்பிக்கையும் மதிப்பும் உள்ள பெண்ணுக்கு காதலிக்கும் தகுதி தானாகவே வந்துவிடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
