ஞானகுரு பதில்
கேள்வி : திருடன் பணத்தைப் பறிக்கும் நேரத்தில் தற்காப்புக்கலை எந்த அளவுக்கு உதவி செய்யும்..?
- என்.பரமேஸ்வரன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஞானகுரு :
எந்த ஒரு உயிரினமும், தன் இனத்தைப் பார்த்து அச்சப்படுவது இல்லை. ஆனால், மனிதர்கள் மட்டுமே பிற மனிதர்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள். எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கராத்தே, குங்பூ போன்ற தற்காப்புக் கலை பயன் தரும் என்று நம்புகிறார்கள்.
தற்காப்புக் கலை மூலம் தனி ஒரு நபரை வேண்டுமானால் சமாளிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நபர் வரும்போது தப்பிச்செல்வதே புத்திசாலித்தனம். அதேபோல் ஆயுதத்துடன் திருடர் மிரட்டும்போது எந்த தற்காப்புக் கலையையும் பயன்படுத்த முயற்சிக்கக் கூடாது.
பணம், நகை, செல்போன் ஆகியவற்றை விட உயிர் முக்கியமானது. பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிர் போனால் கிடைக்காது. எனவே, உயிருக்கே முக்கியத்துவம் கொடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
