ஞானகுரு தரிசனம்
கேள்வி : இல்லற பந்தத்தில் நுழையும் தம்பதிகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன..?
- கே.முரளி சங்கர், அல்லம்பட்டி.
ஞானகுரு :
விட்டுக் கொடுத்து வாழ்வதற்கும், தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவரும் மட்டுமே திருமண பந்தத்திற்குள் நுழைவதற்குத் தகுதி பெற்றவர். வரவுக்குள் செலவழிக்கும் சாமர்த்தியத்தையும், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் மனக்கசப்பு வரும் நேரங்களில் நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள் அல்லது மூன்றாம் நபரிடம் பேசுங்கள். பெற்றோர்,
உறவினர் ஆலோசனைகளை ஏற்க வேண்டாம். ஒரு குழந்தை பிறக்கும் வரை, இருவருக்கும் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாகத் தான் இருக்கும். இத்தனை சிரமங்களுக்கு இடையிலும் திருமணம் முடித்துக்கொள்ளவே வேண்டும். ஏனென்றால், எப்போது ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறார்களோ, அப்போது எதிர்பார்ப்புகள் இல்லாத புதியதோர் உலகம் உருவாகிவிடும்.
கேள்வி : ஆலயம் தொழுதல் சாலவும் நன்று என்ற கருத்தின் விளக்கம் என்ன..?
- டி.நந்தகுமார், பாண்டியன்நகர்.
ஞானகுரு :
இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார் எனும்போது எதற்காக ஆலயம் சென்று தொழுதல் வேண்டும்..? அப்போது தான் பூசாரிக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் நல்ல போஜனம் கிடைக்கும்.
