பல் ஈறு காட்டும் எச்சரிக்கை.

கிட்னி ஜாக்கிரதை

பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது மிகவும் சாதாரணம் என்று பலர் அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால் சமீபத்திய மருத்துவ ஆய்வுகள், வாய் ஆரோக்கியத்திற்கும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதிபடுத்தியிருக்கிறது.

ஈறுகளில் நீண்டகால அழற்சி இருந்தால், வாயில் உள்ள பாக்டீரியாக்களும் அழற்சியை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களும் ரத்தத்தின் மூலம் உடலின் பல உறுப்புகளைப் பாதிக்கலாம். குறிப்பாக சிறுநீரகங்கள் இந்த அழற்சியினால் பாதிக்கப்படுகிறது. ஏற்கனவே சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு, ஈறு நோய் அதை மேலும் மோசமாக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பொதுவாக நாள்பட்ட சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் பெரும்பாலும் எந்த அறிகுறியையும் காட்டாது. எனவே, பல் துலக்கும்போது அடிக்கடி ரத்தம் வருதல், ஈறுகள் வீங்கி இருப்பது, வாய் துர்நாற்றம் நீங்காமல் இருப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

பல் ஈறுகளில் தெரியும் அறிகுறியானது, சிறுநீரகங்கள் அமைதியாக அனுப்பும் பெரிய எச்சரிக்கையாக இருக்கலாம்.”

Leave a Comment