ஆறு ஞானிகளின் ஆறு கட்டளைகள்

லைஃப் ஈஸி வழிமுறைகள்

  1. புத்தர்

எதையும் அளவுக்கு அதிகமாக விரும்பாதீர்கள். ஒரு பொருளைப் பெற்றால் மகிழ்ச்சி என்று நினைக்கலாம். அதைப் பெற்ற அடுத்த கணமே, அடுத்த பொருள் தேடி துன்பப்படத் தொடங்குவீர்கள்

2. கன்பூசியஸ்

உங்களுக்கு எது துன்பம் தருகிறதோ, கோபம் உண்டாக்குகிறதோ அதை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். ஒரு நல்ல மனிதராக வாழ்வது நீங்கள் நினைப்பதை விட எளிதானது.

3. இயேசு கிறிஸ்து

நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டும். உங்கள் பகைவர்களை நேசியுங்கள்; உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக ஜெபியுங்கள். உங்களிடம் மோசமாக நடந்துகொண்டவரிடம் நீங்களும் மோசமாக நடந்துகொண்டால், நீங்கள் இருவரும் ஒரே அணியில் தான் இருக்கிறீர்கள்.

4, சாக்ரடீஸ்

தெரியாததை தெரியவில்லை என்று சொல்லிவிடுங்கள். தெரியாமல் இருப்பது ஒன்றும் தவறல்ல, ஆனால் தெரியாத விஷயத்தை தெரியும் என்பது மோசமானது.

5, லாவோ சூ

மற்றவர்களின் மனதை உங்கள் விருப்பப்படி வளைக்க முயற்சிக்காதீர்கள். வாழ்க்கை என்பது இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டிய ஒன்றல்ல. எவ்வளவு இறுக்கமாகப் பிடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அது மணலைப் போல நழுவிச் சென்றுவிடும்.

6. மார்கஸ் அரேலியஸ்

உங்களைப் பற்றி ஒருவர் தவறாகப் பேசுவது அல்லது மோசமாக நடந்துகொள்வதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. கண்டுகொள்ளாமல் நகரவேண்டுமே தவிர, எதிர்வினையாற்ற நினைத்து அவமானப்பட அவசியமில்லை.

Leave a Comment