நினைச்சு நினைச்சு சிரிங்க.
சின்னப் பசங்க பேசுறது ரொம்பவே ஜாலியாக இருக்கும். கொஞ்சம் விஷமத்தனம் கலந்து இருந்தாலும் வாய் விட்டு சிரிக்க வைத்துவிடும். அப்படிப்பட்ட ஜோக்ஸ்.
பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
ஒரு சின்னப் பையன் பள்ளிக்குப் போகும் வழியில் திடீரென மழை வந்தது. அருகே இருந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒதுங்கி நின்றான். உள்ளே நிறைய திருடர்களின் புகைப்படங்களை ஒட்டி இருந்தார்கள். அதனை எல்லாம் ஆர்வமாகப் பார்த்தான்.
அங்கே இருந்த இன்ஸ்பெக்டரிடம், ‘அந்தப் படங்களில் இருப்பவர்கள் யார்?’ என்று கேட்டான்.
‘எல்லாருமே ரொம்பவும் மோசமான ஆளுங்க. கொலை செய்வாங்க… கொள்ளை அடிப்பாங்க’ என்று சொன்னார்.
உடனே அந்த சிறுவன், ‘அவங்களை போட்டோ எடுக்கும்போதே பிடிக்க மாட்டீங்களா? வெளியே விட்டுட்டு ஏன் தேடிக்கிட்டு இருக்கீங்க?’ என்று கேட்டான். பதில் சொல்ல முடியாமல் இன்ஸ்பெக்டர் பையனை வெளியே விரட்டி விட்டாராம்.
……………
ஹோம் ஒர்க்
‘’ஏண்டா ஹோம் ஒர்க் செய்யலை…’’
‘’கரண்ட் இல்லை சார்…’’
’’கரண்ட் இல்லைன்னா என்ன, மெழுகுவத்தி வைச்சு எழுதலாமே..?’’
’’மெழுகுவத்தி ஏத்த தீப்பெட்டி இல்லை’’
’’ஏன்..’’
‘’அது சாமி ரூம்ல இருந்திச்சு… அதான் எடுக்கலை…’’
‘’சாமி ரூம்ல இருப்பதை ஏன் எடுக்கலை’’
‘’நான் குளிக்கலை…’’
‘’ஏன் குளிக்கலை…’’
‘’மோட்டார்ல தண்ணி வரலை…’’
‘’ஏன் தண்ணி வரலை…’’
‘’அதான் சொன்னேனே, கரண்ட் இல்லைன்னு…’’
ஆசிரியர் மயங்கியே விழுந்துவிட்டார்.
