ஞானகுரு கவுன்சிலிங்
ஒரு குழந்தை போதும், ஒரு குழந்தையைத்தான் நல்லா கேர் பண்ணி வளர்க்க முடியும்னு சில தம்பதிகள் நினைக்கிறாங்க. முதல் குழந்தைக்கு ஒரு ஆதரவு வேணும், எதிர்காலத்தில் தனியா இருக்கக்கூடாதுங்கிற கண்ணோட்டத்தில் இரண்டு குழந்தைகள் வேணும்னு நிறைய பேர் சொல்றாங்க.
ஒரு குழந்தையா, இரண்டு குழந்தையாங்கிற குழப்பம் நிறைய குடும்பங்களில் இருக்குது. இரண்டாவது குழந்தை வேணுமா வேண்டாமான்னு எப்படி முடிவு செய்றதுன்னு பார்க்கலாம்.
திட்டமிட்டு இரண்டாவது குழந்தை பெத்தவங்களை விட, திட்டமிடாமல் இரண்டாவது குழந்தை பெத்தவங்களே அதிகம். அதனால ஆண், பெண்ணுக்கு இருக்கிற கர்ப்பத்தடை சாதனங்களை முறையா கடைப்பிடித்து கர்ப்பத்தை தள்ளி வைப்பதில் தம்பதிகள் ரொம்பவும் தெளிவா இருக்கணும். எமோஷனலா எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதாவது, ஒருவருக்கொருவர் துணையாக இருப்பாங்க, யாராவது ஒரு பிள்ளை பெத்தவங்களைப் பாத்துக்கும் என்றெல்லாம் காரணம் சொல்லி இரண்டாவது பிள்ளை பெற வேண்டாம்.
தாயின் ஹெல்த், குடும்ப ஃபைனான்ஸ், தம்பதிகளின் லட்சியம், வாழ்க்கைச் சூழல், டைம் மேனேஜ்மெண்ட் போன்ற எல்லாவற்றையும் அலசி ஆராய வேண்டும். முதல் பிரசவத்துக்குப் பிறகு பெண் உடல் மீண்டும் பழைய ஆரோக்கிய நிலைக்குத் திரும்பியிருக்க வேண்டும். இதுதான், இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முதல் தகுதி.
ரெண்டு பிள்ளைகள் என்றால் நல்ல ஸ்கூல், மேற்படிப்பு, மேரேஜ்ன்னு நிறைய செலவு வரும். சமாளிப்பதற்கு பணம் இருக்கிறது அல்லது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையே அடுத்த தகுதி.
புதிய தொழில் தொடங்கும் ஆசை இருக்கலாம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் எண்ணம் இருக்கலாம். இது போன்ற லட்சியத்துக்கு இரண்டாவது குழந்தையால் சிக்கல் இல்லை என்ற முடிவுக்கு வருவது மூன்றாவது தகுதி.
முதல் குழந்தைக்கு கர்ப்பத்தில் இருந்து ஸ்கூல் போகும் வரை இரவும் பகலுமாக பேரண்ட்ஸ் கண் விழிச்சு வளர்த்திருப்பாங்க. ஆனா, அந்த பொறுமை, நேரம் இரண்டாவது குழந்தைக்கும் இருக்குமான்னு யோசிக்கணும். இந்த நாலு குவாலிபிகேஷனும் இருந்தா நிச்சயம் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
