உயிரின் விலை என்ன…?

ஞானகுரு சிந்தனை

மரம், செடி, கொடி, புழு, பூச்சி, கோழி, ஆடு, மாடு போன்றவைகளுக்கு உயிர் இருக்கிறது. மனிதர்களுக்கும் உயிர் இருக்கிறது. எல்லா உயிரும் ஒன்றுதானா?

ஆம். உயிர் என்றால் உயிர்தான். மரத்துக்கு இருக்கும் உயிர்தான் மனிதனிடத்திலும் இருக்கிறது. கொசுவின் உயிருக்கும் மனிதனின் உயிருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

உயிர் என்பது காற்று போன்ற வேதியல், அந்த வேதியல்தான் உடம்புக்குள் நுழைந்து இயக்குகிறது என்பது மருத்துவம். ஆனால் அது எப்படி உருவாகிறது, எப்படி உயிராக நுழைகிறது, மரணத்துக்குப் பிறகு எங்கே செல்கிறது என்பதெல்லாம் இன்னமும் கண்டுபிடிக்க முடியாத புதிர்.

கரப்பான், கொசு, மூட்டைப் பூச்சுகளை அடித்துக் கொன்றுவிடுகிறோம். கோழி, வாத்து, முயலுக்கு சிறு பணம் கொடுத்து வாங்கி கொன்று சாப்பிடுகிறோம்.

மூச்சுக் காற்றில் மட்டும் கோடிக்கணக்கான உயிர்த் துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு தானியமும் ஒரு உயிர். ஒரு நெல் விளைந்தால் அதிலிருந்து ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பெற முடியும். ஒன்று ஆயிரமாக லட்சமாக கோடியாக மாறுவதே உயிரின் ஆச்சர்யம்.

அதேநேரம், ஒன்றையொன்று கொன்று தின்னும் வகையிலே இந்த உலகம் படைக்கப்பட்டிருப்பதால் உணவுக்காக கொல்லப்படும் எதற்கும் வருத்தப்பட அவசியம் இல்லை.

Leave a Comment