ஞானகுரு தரிசனம்
கேள்வி : ஞானகுருவாக என்ன செய்ய வேண்டும்..?
- எஸ்.மாணிக்கம், என்.ஜி.ஓ. காலனி.
ஞானகுரு :
ஆசைகளைத் துறக்க வேண்டும் என்று நினைப்பதும் ஆசையே… எனவே மனிதராகப் பிறந்த யாராலும் ஆசைகளை முழுமையாகத் துறந்துவிட முடியாது, அது தேவையும் இல்லை. ஞானகுருவாக வேண்டுமென்றால் துறவியாக வேண்டிய அவசியம் இல்லை. வாழ்வில் தெளிவு பெற்ற ஒவ்வொரு நபரும் ஞானகுரு. எல்லா மனிதருக்குள்ளும் ஞானகுரு இருக்கவே செய்கிறார்.
…………..
கேள்வி : சின்ன ஊர்களில் பெரிய வணிக வளாகங்கள் வராததற்குக் காரணம் என்ன..?
- ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.
ஞானகுரு :
தேவையே வணிகத்தை தீர்மானிக்கும். சாப்பிடுவதற்குச் செலவழிக்கும். சிறிய நகர மக்களிடையே பிராண்டிங் பொருட்கள் மட்டுமே வாங்கி பெருமைப்பட்டுக்கொள்ளும் கலாச்சார மோகம் இன்னமும் வரவில்லை. லோக்கல் ஹேண்ட் பேக் வைத்திருக்கும் பெண்களையும் டா மிலானோ, லெவி போன்ற 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஹேண்ட் பேக் வைத்திருக்கும் பெண்களையும் ஆண்கள் எப்போது பிரித்துப் பார்த்து ஆச்சர்யப்படத் தொடங்குகிறார்களோ, அப்போது சிறிய நகரங்களுக்கும் பெரிய வணிக வளாகங்கள் வந்துவிடும்.
